விலை : 28
விலை : 28 தூது அனுப்பிடவே நேரம் எனக்கிலையே... நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே... ஜார்ஜ் பிரகாஷ் மூலம் தொடங்க பட்ட அனைத்து வேலைகளையும் அடியோடு அழித்து விட்டு புதிதாக ஆரம்பித்திருந்தான். மீண்டும் முதலில் இருந்து வேலையை தொடங்கி கொடுக்க பட்ட நாளுக்குள் முடிப்பது என்பது மலையை பிளப்பது போல் கடினமான வேலை என்று அறிந்தாலும் அவர் மூலம் சிறு துரும்பும் தனக்கு தேவையில்லை என்று எப்போதோ முடிவு செய்து அவர்களை ஒதுக்கி வைத்தவன் ஆயிற்றே. இப்போது வந்து ஒட்டிக் கொண்டாள் அதை ஏற்பானா என்ன ? ஜார்ஜின் இந்த முடிவை அறிந்துக் கொண்ட பிரகாஷ் மனதளவில் மிகவும் சோர்ந்து போனார். தன் உழைப்பு வீணாவதை எண்ணி அவர் துளியும் வருந்தவில்லை. தான் பாசம் கொட்டி வளர்த்த மகன் இன்று தன்னையே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு அவனை ஆளாக்கிய தன் மீது தான் அவருக்கு கோபம் வந்தது. ஆனால் அதற்காக , தனக்கும் தன் மகனுக்கு இந்த பிரிவை ஏற்படுத்திய ஷோபியாவிடம் கடுமையாக நடக்கும் அளவிற்கு அவர் ஒன்றும் கொடூரமானவரும் கிடையாது. அவருக்கு தன் உதிரத்தில் பிறந்த மகனா ? இல்லை ஆருயிர் மனைவியா ? இருவரில் யார் வேண்டும் என்று கேட்டாள். அவர் மனைவி பக