Posts

Extra bonus..

Image
  Extra bonus.. சில்லென்ற குளிர் உடலை ஊடுருவி செல்ல , கால் பாதங்கள் வேறு ஆயிரம் பனிக்கட்டிகள் மேல் இருப்பது போல் விரைத்து கொள்ள , தான் மூடி இருந்த போர்வையுனுள் தன் காலோடு சேர்த்து உடலையும் சுருக்கி கொண்டாள் தாமினி. கரு விழிகள் உருட்டி மெல்ல கண் திறந்து பார்க்க , எதிரில் கண்ணாடி தடுப்பில் பனி பொழிவு ஏதோ அசுர மழை பெய்ந்தது போல் , நீர் துளிகளாய் வழிந்து ஓடி கொண்டிருந்தது. நன்றாக கண்களை திறந்து அறையை பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள். அடுத்த நொடியே போர்வையை உதறி தள்ளி கட்டிலை விட்டு இறங்கியவள் "ஜார்ஜ் ஜார்ஜ்..." என்று கத்தி அழைக்க , அவன் அங்கு இருந்தால் தானே பதில் அளிக்க. அந்த அறையை திறந்து வெளியே வர , தாய்லாந்தில் ஹனிமூன் சென்ற போது தங்கியது போலானா காட்டேஜ். " என்ன இடம் இது ?" என்று எல்லா இடங்களிலும் தன்னவனை தேட , பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். வெளி கதவும் திறக்க முடியமல் போக , ஏகத்துக்கும் குழம்பி போனாள். " நான் எங்க இருக்கேன். ஒருவேளை கனவுல இருக்கேனா ?" என்று எண்ணியவளோ , " முழுச்சுக்கோ மினி முழுச்சுக்கோ" என்று கண்களை மூடி வல கையால் வ...

விலை : 52

Image
  விலை  : 52 அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு! உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு கலந்தாச்சு!! நீ தினம் சிரிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே!!!! நான் உன்ன ரசிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே!!!! " டாட் வீ ஆர் கோயிங் டூ லிவிங் டுகெதர்" என்று சொன்னவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்த ரியான் தந்தை , எதிரில் நின்றிருந்தவர்களை பார்த்து அதிர்ச்சியாகி தான் போனார். மகன் "சேர்ந்து வாழ போகிறோம்" என்று கூறியதே அவருக்கு முதல் அதிர்ச்சி என்றால் ஒரு ஆணை அழைத்து வந்து எதிரில் நிற்க வைத்தால் அவரும் என்ன தான் செய்வார். சில நொடிகள் அவன் சொன்னதை கிரகித்துக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டவர் , அவன் கூறியதை மூளை ஏற்ற நேரம் "என்ன டா இதெல்லாம் ?" என்று அவன் மீது சீறி விட்டார். ஜார்ஜ் மற்றும் பிரகாஷ் தான் அவரை தடுத்து பிடித்தனர். அப்போதும் கூட தன் விரலோடு விரல் கோர்த்து நின்றவன் விரல்களை அழுத்தி பிடித்தானே தவிர , அவன் கையை விடும் எண்ணம் வரவில்லை ரியானுக்கு. ஜார்ஜும் அவன் குடும்பமும் லண்டன் சுற்றுலா வந்து இருந்தனர். வந்தவர்கள் ரியான் வீட்ட...