குற்றமென்பது யாதெனில்? - 1



 

 குற்றமென்பது யாதெனில்?


அத்தியாயம் 1



அரங்கம் அதிரும் கரகோஷங்கள் நடுவே நிமிர்ந்த நன்னடையுடன் மேடை ஏறியவன், அங்கே நின்றிருந்த உயர் காவல் அதிகாரி முன் சலியுட் அடித்து விரைப்பாக வந்து நின்றான் இளம் காவல் ஆய்வாளன் கர்ணன். நேர் கொண்ட பார்வை அவன் பயமறியான் என்பதை பறைசாற்றிட, நெஞ்சுறைந்த திண்ணம் அவன் ஊழலுக்கு அடிபணியான் என்பதையும் உரக்க சொன்னது.


பல காக்கி சட்டைகள் மத்தியில் அவன் மட்டும் இன்று உயர்ந்து நிற்க அவன் நேர்மையும் கூட காரணம் தானே.


கர்ணன் இளம் காவல் ஆய்வாளன். பணியில் சேர்ந்து ஐந்தாண்டுகள் தான் ஆகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பாக பணி புரிந்து வருகிறான். இதுவரை அவன் நிலையத்திற்கு வந்த அனைத்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்டு அனைத்தையும் முடித்து வைத்துள்ளான் என்பதற்காக அவனது உயர் அதிகாரிகள் கொடுக்கும் சிறிய பாராட்டு விழா தான் இது.

 

பாராட்டு விழா முடிந்ததும் அன்று இரவு, அவனது  வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான்.


மாலை அவனது வீட்டிற்கு சக பணியாளர்களும்,  சேம் பேச் ஃப்ரெண்ட்ஸும், நெருங்கிய நண்பர்களும் வந்திருந்தனர்.


கர்ணன் அவர்களுக்கு அவனது குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தான். 


கர்ணனின் தம்பி பிரவீன். இப்பெயர் தனது சித்தப்பாவின் நினைவாக அவனுக்கு வைக்கப்பட்டதாக கூறினான். 


தனது தம்பி தன்னைவிட மிகவும் புத்திசாலி என்றும், படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் என்றும் கூறினான். 


இப்போது படித்து முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறான். 


மேலும் பல குற்றங்களில் அவன் உதவி செய்ததாக கூறினான். ஒரு குற்றம் நடந்தால், அது எவ்வாறு நடந்திருக்கும்? அதை எந்தெந்த கோணத்தில் எல்லாம் கையாளலாம் என்றும், அதில் இருந்து கிளம்பும் பல சந்தேகங்களை தந்தை மற்றும் தம்பி என மூன்று பேரும் அடிக்கடி கலந்துரையாடுவார்கள் என்றான். 


இது எனக்கான பாராட்டு விழா மட்டுமில்ல என் குடும்பத்துக்கும் இதுல பங்கு இருக்கு என்று நெகிழ்வாக சொன்னவனிடம்,


என்ன கர்ணா சொல்ற? உன்னோட வேலைக்கு உன் தம்பியும், அப்பாவும் எந்த விதத்தில உதவி செய்திருக்க முடியும்? நீ சொல்றது கொஞ்சம் வினோதமா தான் இருக்கிறது” என நண்பன் ஒருவன் சந்தேகம் கேட்டான்.


இதழ்களை கடக்காத மெல்லிய புன்னகையுடன் அவனை ஏறிட்ட கர்ணனோ,


“அதுக்கு காரணம் நான் குற்றம் நடந்த இடத்தில உள்ள எல்லா எவிடன்சையும் வீட்டில வந்து என் தம்பி மற்றும் என் தந்தையிடம் உட்கார்ந்து பேசும்பொழுது என் தந்தை இந்த குற்றங்கள் இவ்வாறு தான் நடந்திருக்கலாம் என அவரது கற்பனையில் ஒன்று கூறுவார். எனது தம்பி இப்படிப்பட்ட குற்றங்கள் பண்ணும் பொழுது தப்பிக்க எந்தெந்த வழிகள் இருக்கின்றன அதனால் இந்த வழிகளில் இதை செய்திருக்கலாம் என்பான். மேலும் இக்குற்றத்திற்கு இவனை நிரூபிப்பது எந்தெந்த தகவல்கள் தேவை என்ற விவரங்களையும் அவன் கூறுவான். இது எனது விசாரணைக்கும் மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் பெரிதும் உதவியது. என்றவன்,


அங்கு அமைதியாக நின்றிருந்த தனது தாயை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான். 


தனது தாய் மிகவும் அன்பானவள் என்றும் வெளி உலகம் அந்த அளவிற்கு தெரியாது என்றும் கூறினான். 


மேலும் தனது தந்தை கூறும் பொய்கள் கூட உண்மையென நம்பும் வெள்ளந்தி. ஆனால் அதிகமாக படித்துள்ளார். சில சமயங்களில் எனது தந்தை கூறும் வார்த்தைகளில் தவறு இருந்தால் அதை பிடித்துக் கொண்டு இருவரும் அடிக்கடி சண்டை போடுவார்கள். அதுவும் சிறிது நேரமே அதை பார்க்கும் பொழுது நமக்கு சற்று எரிச்சலாக இருக்கும் ஆனாலும் அவர்கள் இருவரும் அதை ஜாலியாக எடுத்துக் கொள்கிறார்கள். இதை எவ்வாறு புரிந்து கொள்வது என்று எனக்கு தெரியவில்லை என்று தலையை ஆட்டிய மகன் தலையில் அவன் தந்தை மெதுவாக தட்டிட,


ஹா… ஹா… உங்களை போட்டு கொடுத்துட்டேன்னு அடிக்கிறீங்களா? என்று அவரை வம்பிழுத்துக் கொண்டே,


இவர் தான் என் அப்பா இளங்கோ. என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தவன், தனது தந்தை உடல்நிலை சற்று சரியில்லாத காரணத்தால் அரசு வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தற்போது விவசாயம் செய்து கொண்டிருப்பதாக கூறினான்.

 

அவன் நண்பர்களில் ஒருவன் உனது தந்தையை பார்த்தால் 45 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராகவே தெரிகிறார். அவர் ஏன் விருப்ப ஓய்வு பெற்றார்? எனக் கேட்டான்.


மேலும் “அவர் காவல்துறையில் பணியாற்றியவரா? உனது  பணிக்கு உதவினார் என்று கூறினாயே அதான் கேட்டேன்” என்று கேட்க,


கர்ணன் “அவர் காவல்துறையில் பணி புரியவில்லை. ஆனால் அவரது கற்பனை திறன் நன்றாகவே இருக்கும். ஒரு குற்றத்தில் இருக்கும் தரவுகளை அவரிடம் சரியாக காண்பித்தால், இவ்வாறு தான் நடந்திருக்கும் என்று அவரது கற்பனையில் ஒன்றை கூறுவார். அந்த கற்பனை பெரும்பாலும் நடந்திருக்கும் விதத்தில் 60 முதல் 70 சதவீதம் சரியாக ஒத்துப் போகிறது” என்றான்.


“அந்த கற்பனைத் திறன் என்ன என்பதை எங்களிடம் கூற முடியுமா? ஏதாவது ஒரு நிகழ்வை உதாரணமாக சொல்லலாமா?” என அவன் நண்பன் கேட்டான்.

 

கர்ணன் அதற்கு அவன் பணியில் சேர்ந்து மூன்று நாட்களில் நடந்த ஒரு கொலை சம்பவத்தைப் பற்றி கூற ஆரம்பித்தான் . 


தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த பெரிய கால்வாயில் இருந்து ஒரு ஆண் சடலம் கிடைத்தது. அவர் ஒரு சிறிய கிராமத்தின் சிறு அரசியல் பிரமுகர். அவரை அடித்துக் கொன்றதாகவும், அவரது உடலை கால்வாயில் போட்டதாகவும் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 


அது முதற்கட்ட தகவலாக பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் குற்றவாளிகள் என யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை அதுவே எனது முதல் கேஸ் என்பதாலும் மிகவும் வருத்தத்துக்கு உள்ளானேன். 


அதை வீட்டிற்கு வந்து எனது தந்தையிடம் வேலை மிகவும் கடினமாக இருப்பதாகவும், மிகவும் எரிச்சலாக இருக்கிறது என்றும் கூறிக் கொண்டிருந்தேன். 


அப்போது எனது தந்தை அந்த புகைப்படங்களையும், முதல் தகவல் அறிக்கையையும் படித்தார். மேலும் சம்பவ இடத்தை பார்க்க எங்களிடம் கூறாமல் சென்றார். அதன் பிறகு என்னிடம் கூறினார் இது கொலை அல்ல விபத்து என்று. 


என்னால் அதை நம்ப முடியவில்லை. மேலும் எனது தந்தை ஒன்றும் காவல்துறையில் பணியாற்றியவர் அல்ல என்பதால் என்னால் அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. எனது தந்தை என்பதால் அவரிடம் மேலும் வினாவினேன். 


“எவ்வாறு இப்படி கூறுகிறார்கள்? உங்களால் அதை நிரூபிக்க முடியுமா?” எனக் கேட்டேன். 


“எனது தந்தை கூறினார் ‘அந்தக் கால்வாயின் அருகில் ஒரு சாலை அமைந்துள்ளது. சிறிய வாகனங்கள் சென்று வரலாம். சம்பவத்தின் போது விக்டீம்  இருசக்கர வாகனம் ஓட்டிக்கொண்டு தனது மனைவியிடனும் கோபத்துடன் பேசிக்கொண்டு சென்று உள்ளார். இது உனது முதல் கட்ட தகவல் அறிக்கையில் உள்ளது.


அவர் பேசுவது சரியாக கேட்கவில்லை என்றும் அவரது மனைவி கூறியிருந்தார் அதற்கு காரணம் அவர் அதிக விரைவாக சென்றது. அவரை ஏதோ அடித்தது போல சத்தம் கேட்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். அது அவர் விபத்துக்குள்ளானது. உடன் அந்த பதட்டத்தில் அவர் போட்ட சத்தங்கள் மட்டுமே. அந்த இடத்தில் மொபைல் தனியாக விழுந்ததால் அவருக்கு ஏதோ நேர்ந்தது என மட்டுமே அவரது மனைவிக்கு புரிந்தது. 


அவர் கோபத்துடனும் ஏதோ ஒருவருடன் பிரச்சனை ஏற்பட்டதால் அவரை வெட்டுவேன் குத்துவேன் என கூறியதாலும் அவர் கூறிய நபர் தான் இதை செய்ததாக அவரது மனைவி நினைத்துக் கொண்டார். மேலும் வாகனத்தின் முன்பக்கம் பெரிய அளவு ஏதும் அடிபடவில்லை ஆனால் வண்டியின் வீல் வளைந்துள்ளது ஒருவர் அவரை நேரடியாக தாக்கி இருந்தால் வண்டி சரிந்து விழுந்து சற்று தூரம் இழுத்து சென்றிருக்கும். அப்படி என்றால் வண்டியின் பக்கவாடு மட்டுமே அடிபட்டிருக்கும். ஆனால் இங்கு அவ்வாறு அல்ல முன் பக்கம் மட்டுமே பைக்கின் பாகங்கள் சிதைந்துள்ளது. அதுவும் சிறிதளவு . 


விபத்துக்குள்ளானதில் அவர் மயக்கமுற்று கால்வாயில் விழுந்திருக்கலாம். அவரது இரு சக்கர வாகனம் மற்றும் அவரது உடல் கிடைத்த இடம் இரண்டும் ஒரு 200 மீட்டர் வித்தியாசத்தில் உள்ளது. இது அவரது உடல் அழுகி நிலையில் கிடைத்ததால் தண்ணீரில் சற்று இழுத்து வந்திருக்கலாம். அவர் உயிர் போன இடம் பைக் விழுந்த இடத்திற்கு  அருகில் தான் இருக்க வேண்டும்” என்று கூறினார்.  


கர்ணன் “ஒருவேளை அவரை யாரேனும் அடித்து கொலை செய்து கால்வாயில் போட்டு இருக்கலாம். இதற்கு என்ன சொல்கிறீர்கள்” எனக் கேட்டான் 

 

அதற்கு தந்தை கூறியது “அவனின் உடல் பாகங்களில் எதுவும் பெரிதாக அடிப்படவில்லை என்று நீ கூறினாய். அவனது தலையில் மட்டும் சிறு அடி என்று கூறினாய். அந்த சிறு அடி தான் அவனது மயக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் அந்த அடியும் கூட சிறிது அடிபட்ட இடத்திற்கு அருகே  சிராப்புகள் பக்கத்திலே இருப்பதாக கூறினாய். அதற்கு காரணம் அடிபட்ட இடத்திலிருந்து அவர் இழுத்துச் சென்றது. மணலில் ஒருவர் உடல் இழக்கும் பொழுது சிறிது ஸ்கிராய்ப்புகள் ஏற்படும் அதுதான் அடிபட்ட இடம் அழுத்தமாகவும், அதனை ஒட்டிய பகுதி சிறிது கீரலுடனும் காணப்படுகிறது. ஒருவேளை யாரேனும் அவரை அடித்து காயப்படுத்தி இருந்தால் அடிபட்ட இடம் ஆழமாகவும் அதன் எலும்புகள் முறிந்தும், மீதம் உள்ள பகுதிகள் சிதைந்தும் இருக்கும்” என கூறியவர், 


மேலும் “மயக்கமற்ற நிலையில் ஒருவன் நீரில் விழும் பொழுது அவனது குடல் பகுதியில் பெரும்பாலும் நீர் இறங்காது அவனது நுரையீரல் பகுதியில் மட்டுமே நீர் இருக்கும். அதுவே இறந்த நிலையில் தண்ணீரில் விழுந்தால் நுரையீரல் பகுதியில் தண்ணீர் இருக்காது” என்று கூறினார். 


“அப்பொழுது எனது தந்தை கூறியதை எனது மனம் ஏற்கவில்லை இரண்டு நாட்கள் கழித்து பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் எனது தந்தை கூறியது போலவே இருந்தது. நுரையீரலில்  தண்ணீர் இருந்ததாகவும் அவரது உடம்பில் வேறு எங்கும் வெட்டு காயங்களோ, அடிபட்ட தழும்புகளோ, எதுவும் இல்லை.


டாக்டர் கூறியது பெரும்பாலும் தவறுதலாக தண்ணீரில் விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறினார். 


அன்று முதல் எனது தந்தையின் கற்பனைத் திறனை இன்னும் வியந்தேன்.” என்று மகன் தந்தையை புகழ்ந்து சொல்ல, அவன் அன்னைக்கு உச்சி குளிர்ந்து. நிறைவான புன்னகையுடன் தன் மகன்களையும், கணவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.  


அனைவரும் இரவு உணவை ருசி பார்த்துக் கொண்டிருக்க, அப்போது அவனது நண்பர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவன் மற்ற நண்பர்களிடம் அவனது தந்தை முதுகு தண்டுவட வாத நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தான். மற்றொருவன் அப்படி என்றால் என்ன நோய்? எனக் கேட்டான். 


அதற்கு அவன் “அதைப் பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால் சில நேரங்களில் அவர் நடக்க முடியாமல் கஷ்டப்படுவதாகவும், சில சமயங்களில் அவர் சரியாக தூங்க முடியாமலும், கை, கால்களில் அதிக வலி இருப்பதாகவும் கூறுவதாக கேள்விப்பட்டதாக சொல்வான்.” என்று அவர்களுக்குள் சிறு உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. 


அப்போது பிரவின் அங்கே வர, அவனிடம் பேச்சு வார்த்தையை தொடர்ந்தார்கள். 


“நீ இன்று மிகப்பெரிய வழக்கறிஞராக உள்ளாய். நாளை நீதிபதியாக கூட மாறலாம். அப்படி வரும் பட்சத்தில் எங்களைப் பார்த்து கவனித்துக் கொள். ஏதேனும் எங்கள் மீது குற்றங்கள் வந்தால் எங்களை காப்பாற்று. எங்களை நினைவு வைத்துக் கொள். மாறாக எங்களை தண்டித்து விடாதே.” என கிண்டலாக கூறிக் கொண்டிருந்தனர். அனைவரும் நல்ல முறையில்  நட்பு பாராட்டி கொண்டிருந்தனர்.


அப்போது பிரவீனிடம் ஒருவன் கேட்டான், “உனது அண்ணனுக்கும், உனது தந்தைக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கும் போல என நினைக்கிறேன்” என்றான். 


அதற்குப் பிரவீன் “நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் எனது தந்தை எனது அண்ணனின் சிறு வயது முதல் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை வாய் வார்த்தையால் மட்டுமே தீர்த்து முடிக்க விரும்புவார். சில சமயங்களில் அவர் பிரச்சனைகளை விட்டு ஒதுங்கி வரவே நினைப்பார். அதை கவனித்த என் அண்ணன் அவனது சிறு வயது முதல் எனது தந்தை மிகவும் பயந்த சுபாவம் உடையவர் என முடிவு கட்டிவிட்டான். மத்தபடி இவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது” என்றான். 


கர்ணனின் நண்பர்களில் ஒருவன் “நீ மிகுந்த புத்திசாலியாகவும் உள்ளாய். அதிக மார்க் எடுத்து உள்ளாய். ஏன் நீ வழக்கறிஞராக வேண்டும் என்று ஆசைப்பட்டாய்?” என வினாவினான். 


அதற்கு பிரவீன் “என்அம்மாவிடம் நான் கேட்டேன். என்ன படிக்க வேண்டும் என்று? எனது அம்மாவின் ஆசை நான் வழக்கறிஞர் ஆகினேன்.” என்று கூறினான். 


இரவு உணவு முடித்து அனைவரும் வீட்டிற்கு சென்றனர். 



அடுத்த நாள் காலையில் கர்ணன் வேலைக்குப் போகும் போது அவனது தாய் அவனிடம் இந்த மாதம் கொஞ்சம் பணம் தேவைப்படுவதாக கூறினார். இதுவரை அவனது தாய் வீட்டில் செலவிற்காக அவனிடம் பணம் கேட்டதில்லை. கர்ணன் அவன் தாயிடம் “என்னமா இந்த மாதம் ஏதும் அதிகபட்ச செலவு ஏற்படுகிறதா?” என கேட்டான்.


அதற்கு “அப்படி ஒன்றும் இல்லை. அப்பா அவரது தம்பியின் நினைவாக தெரு நாய்களுக்கு 12 மாதங்கள் அவரது தம்பியின் இறந்த தேதி அன்று உணவளிக்க ஆசைப்படுகிறாராம். அதற்காகத்தான் இம்மாதம் உன்னிடம் நான் பணம் கேட்டேன்” என்றார்.


கர்ணனும், பிரவினும் “திடீரென இப்போது எதற்கு அப்பா செய்கிறார்?” என கேட்டார்கள்.


“நேற்று இரவு அவரது கனவில் அவர் தம்பி தோன்றியதாக அவர் கூறினார். அது அவரது விருப்பம் நாம் அதை கேட்க வேண்டியது இல்லை” எனக் கூறினாள். 


கர்ணன் மற்றும் பிரவீன் இருவரும் “தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள்” எனக் கூறிக் கொண்டே இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றார்கள்.


ஒரு சில நாட்கள் கழித்து கர்ணனின் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் முன்னாள் அரசு வழக்கறிஞர் தாக்கப்பட்டதாகவும், அவர் இறக்கும் தருவாயில் இருப்பதாகவும் கூறப்பட்டது. என்ன நடந்தது? என விசாரிக்க செல்ல வேண்டும் என அவனது உயர் அதிகாரி கூறினார். 


கர்ணனும் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவருக்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவரிடம் இன்று பேச முடியாது என்றும், அவரை பிறகு வந்து விசாரித்துக் கொள்ளுங்கள் என்றும் மருத்துவர் கூறவே, அவரது உறவினரிடம் கர்ணன் தனது விசாரணையை துவங்கினான்.


அரசு வழக்கறிஞரின் மகள், காலையில் எனது தந்தை பொழுதுபோக்குக்காக வெளியே சென்று வருவது வழக்கம். அது போல் தான் இன்றும் சென்றார். திடீரென என்னை  தொலைபேசியில் அழைத்து எனது மகனை உடன் அழைத்து சென்று இருப்பதாகவும், அவனை இப்போது காணவில்லை என்றும் கூறினார். உடனே நான் அவ்விடத்திற்கு வருவதாகவும், நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். 


வயதானவர் அல்லவா! அதனால் அவனை அறியாமல் கவனிக்காமல் விட்டிருப்பார். அருகில் தான் இருப்பான் என காவல்துறைக்கும் நான் தகவல் தெரிவிக்கவில்லை. அங்கு சென்று பார்த்தபோது எனது மகன் அங்கு தான் இருந்தான். எனது தந்தையின் உடம்பில் சிறு காயங்கள் இருந்தது. ஆனால் அவர் மிகவும் பயந்த நிலையில் இருந்தார் அங்கு என்ன நடந்தது என்று எனக்கு சரியாக தெரியவில்லை என் மகனிடம் கேட்டால் பக்கத்தில் இருந்த ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், வந்து பார்த்தபோது தாத்தாவின் கால்களில் ரத்தம் வந்ததாகவும் கூறினான். அவனுக்கும் அதைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை” என்றாள் அவள்.


கர்ணன் முதல் கட்ட தகவல் அறிக்கையை பதிவு செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு திரும்பினான். அன்று இரவு அவனுக்கு பணி கூடுதலாக கொடுக்கப்பட்டது. எப்போதும் போல இரவு பணி முடித்துவிட்டு காலை ஒரு நாலு மணிக்கு நிலையத்திற்கு வந்து படுத்தான். 


அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் காலை பத்து மணியளவில் மாற்றுப் பணிக்கு வந்த எஸ் ஐ யை பணியமர்த்தி விட்டு, வீட்டிற்கு திரும்பினான். 


அவன் வீட்டிற்கு வரும்போது அவனது தம்பி மற்றும் தந்தை வெளியே கிளம்பி கொண்டிருந்தனர். அவன் அதை பொருட்படுத்தாது வீட்டில் சென்று நன்றாக தூங்கினான்.

            

மதியம் மூன்று மணி அளவில் எழுந்து அவனது அம்மாவிடம் தனக்கு பசிப்பதாக கூறினான். அவனது அம்மாவும் உணவு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அன்று அவனது வீட்டில் அசைவம் இருந்தது. பொதுவாக வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அசைவம் எடுப்பார்கள். “இன்று சனிக்கிழமை தான அம்மா நான் ஒரு வேளை மறந்து தூங்கி விட்டேனா?” என கேட்டான்.


அதற்கு அவன் தாய் “இல்லை உன் தந்தை இன்று நாய்களுக்கு உணவளிக்க சிக்கன் மட்டும் மட்டன் என பச்சைமாமிசம் ஏற்பாடு செய்திருந்தார். அதிலிருந்து கொஞ்சம் எடுத்து உணவு சமைத்தேன்” என்றார். 


“நாய் விருந்துல பங்கா?” என்று நக்கலாக கேட்டு கொண்டே உண்ண ஆரம்பித்தவன், “பிரவீன் எங்க?” என வினாவினான் 

“உனது தந்தையும் பிரவினும் சேர்ந்து தெரு நாய்களுக்கு உணவளிக்க சென்றுள்ளார்கள்.” 


“எத்தனை கிலோ கறி வாங்கினார்கள் தெரியுமா?” என கர்ணன் கேட்க, 


அதற்கு அவனது தாய் “60 கிலோ இருக்கும்” என கூறினார். 


கர்ணன் “எதற்கு பணத்தை இப்படி விரயம் செய்கிறீர்களே?” என சற்று பிடித்தமின்றி கேட்க,


“விடு மாதத்தில் ஒரு முறை மட்டும் தானே” எனக் கூறினார் அவர். 


“தெரு நாய்கள் இவரை கடிக்காமல் இருந்தால் சரி. பிரவினையும் உடன் ஏன் அழைத்துச் சென்றார்? அவனுக்கு இன்று வேலை இல்லையா?” என கோபமாக கேட்டுக் கொண்டே தனது வேலைக்கு கிளம்பி விட்டான்.   


இரவு 7 மணி அளவில் மருத்துவமனைக்கு முன்னாள் அரசு வழக்கறிஞரை பார்க்க சென்றான்.


அவர் தனது பெயர் “கார்த்திகேயன்” என்றும், தன்னை ஒருவர் மிரட்டியதாகவும் கூறினார். 


“எதற்காக?” என்று கர்ணன் கேட்க, 


“நான் இதற்கு முன் வாதாடிய வழக்குகளில் ஒன்றில் உண்மையை மறைத்து விட்டதாகவும், அதனால் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கவில்லை எனவும் அந்த நபர் கூறினார்”

 

கர்ணன் “அதற்கு இதுபோல் மிரட்டல்கள் வருவது சகஜம் தானே” என கேட்டான். 


“ஆமாம் இது போன்ற மிரட்டல் வருவது சகஜம் தான். ஆனால் நான் இப்போது ஓய்வு பெற்று விட்டேன்.” என்றவரை புருவம் சுருக்கி பார்த்த கர்ணன்,


“ஓய்வு பெற்ற ஒரு வக்கீலை உண்மையை மறைத்து வாதாடியதாக சொல்லி,  இத்தனை வருடங்கள் கழித்து ஏன் அந்த ஆள் உங்களை மிரட்டனும்?” என்று கூர்மையான விழிகளுடன் கேட்கவும்,


கார்த்திகேயனுக்கு எச்சில் கூட்டி விழுங்கியவர் விழிகள் பயத்தில் அங்கும் மிங்கும் அலைப்பாய்ந்து.   


Comments

Popular posts from this blog

அதிரல் தாங்கும் பாதிரி எக்ஸட்ரா