Posts

Showing posts from July, 2024

குற்றமென்பது யாதெனில்? - 11

Image
  அத்தியாயம் 11 வழக்கு மோசமாய் சென்று கொண்டிருக்கிறது. இரண்டு பெண்கள் கை, கால்களை இழந்து உள்ளனர். இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.  மேலும் இருவர் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை.  குற்றவாளியை பற்றி எந்த தடையமும் இதுவரை கிடைக்கவில்லை.  குற்றவாளி ஒருவரா? இல்லை கூட்டு குற்றவாளிகளா? என எதுவும் தெரியவில்லை. கிடைத்த தடைகளை வைத்து வழக்கை முன்னோக்கி கொண்டு செல்லலாம் என்றாலும் கிடைத்த தகவல்கள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.  குற்றவாளி உடல் ஊனமுற்றவராக இருந்தால், உடல் வலிமை அற்றவராக இருந்தால், கை, கால்கள் வெட்டப்பட்ட இடத்தில் மிக நேர்த்தியாக ஒரே வீற்றில் வெட்டப்பட்டுள்ளது.  இதை வைத்து பார்க்கும் போது அவர் மிகுந்த வலிமை மிக்கவராக இருக்க வேண்டும். இரண்டு ஆண்களை கடத்தி சென்றுள்ளார்.  ஒரு மாற்றுத்திறனாளி அவ்வாறு செய்வது  கடினம் என அனைத்தும் முன்னுக்குப் பின்பாக உள்ளது.  என்ன செய்வது என்று தெரியவில்லை கர்ணனுக்கு.            மேலும் சில நாட்கள் கழித்து காவலர் ஒருவர் கர்ணனிடம் வந்து, நமது நிலைய தொலைபேசிக்கு நமது நிலையை ஆய்வாளர் மனைவி அவர்கள் தொடர்புகொண்டு பேசினார்கள்.  அவரது கணவர் விடும

குற்றமென்பது யாதெனில் - 10

Image
  அத்தியாயம் 10 “பிணமா?” என்று சற்று அதிர்ந்தவன், அதை விசாரிக்க ஆய்வாளருடன் செல்ல வேண்டும். ஆனால் ஆய்வாளர் விடுமுறையில் சென்றிருந்ததால், அந்நிலைய பொறுப்பு முழுவதும் அவனையே சார்ந்துள்ளது.  சம்பவ இடத்திற்கு வந்த கர்ணன் இரு பிணங்களையும் எவ்வாறு கண்டீர்கள்? என தகவல் கொடுத்த நபரிடம் கேட்டான்.  அதற்கு பஞ்சாயத்தில் இருந்து வடிநீர் கால்வாய் வழியாக செல்லும் ஓடைகள் அனைத்தையும் துப்புரவு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், அப்படி செய்து கொண்டிருக்கும் போது, செடி கொடிகளை வெட்டி அகற்றும் போது அதை கண்டதாகவும் கூறினார்கள்.  இரு பிணங்களையும் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தான் கர்ணன்.  மேலும் அந்த இரு சடலங்களும் யாருடையது என்ற விசாரணையில் இறங்கினான்.  ஏற்கனவே இவனது காவல் நிலையத்தில் இருவர் காணாமல் சென்ற வழக்கு நிலுவையில் உள்ளது.  ஒருவேளை அவர்களாக இருக்குமா? என ஐயமும் உள்ளது.  மேலும் கொலையாளி ஏன் இங்கே வந்து சடலங்களை வைத்தான் என்றும் புரியவில்லை.  இது ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதி. சடலங்களை இங்கு வைத்தால் நிச்சயம் தெரிந்துவிடும். குற்றவாளி நோக்கம் என்ன என்பதே புரியவில்லையே.  அவன் மு