விலை : 27
விலை : 27
தூங்கும் போது விழித்து
நான் விழித்த பின்பும் கனவு
வயசு என்னை வம்பு செய்யுதே!!
மாலை நேரம் வந்தால்
என் மனதில் நாணம் இல்லை...
மார்பில் உள்ள ஆடை
என் பேச்சைக் கேட்கவில்லை...
இதய கூடையில் பூக்கள் நிறையுமா ?
இதற்கு பேர் காதல் என்பதா ?
"ஜார்ஜ் நோ... ச்சீ..." என்று தாமினியின் குரல் முணங்களாக கேட்க, அவள் அருகில் படுத்து
இருந்தவன் செவிகளில் அது தெளிவாக கேட்டது. உடனே 'இவ யார்கிட்ட பேசிட்டு இருக்கா?' என்று நினைத்துக் கொண்டே
ஒரு கையை தலைக்கு முட்டு கொடுத்தபடி அவள் புறம் திரும்பி பார்த்தான். அவளோ கண்களை
மூடிக் கொண்டே வெட்க புன்னகையுடன் தூக்கத்தில் உளறி கொண்டிருந்தாள். அவள் உளறல்களை
பார்த்தவன் இதழ்கள் தானாக விரிந்து கொள்ள, அவள் என்ன கூறுகிறாள் என்பது தான் சரியாக கேட்கவில்லை. அவள் வாய்
அருகில் காதை வைத்து கேட்க முயன்றான். "ஹாங்... அப்படி பார்க்காத எனக்கு
என்னமோ பண்ணுது.. அப்புறம் நான் கிஸ் பண்ணிடுவேன்.. ஜார்ஜ் நோ..." என்று
உதடுகளை விட்டு வெளிவராத குரலில் அவள் கூறிக் கொண்டு புன்னகைக்க, அவளின் உளறல் மொழிகள்
அவனுள் பல உணர்வுகளை தூண்டி விட்டது. தன்னவள் தூக்கத்தில் கூட தன் நினைவில்
உளறுவது அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்தது.
அத்துடன் அவளை சீண்டும் எண்ணமும் தோன்றியது. காலையில் எழும் போது 'நீ இப்படி தூக்கத்தில்
உளரினாய் என்று சொன்னால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டாள். இல்லை என்று சாதிப்பாள்' என்று நினைத்தவன் இதை
சொல்லியே அவளை தன்னிடம் சிக்க வைக்க திட்டம் தீட்டினான். அவளுக்கு வாங்கி கொடுத்த
கேமராவை கையில் எடுத்தவன், அதில்
அவளை புகை படம் எடுத்தான். ஆனால் இந்த ஆதாரம் போதாதே என்று நினைத்தவன் அதில்
வீடியோ பட்டனை ஆன் செய்து அவள் அருகில் கட்டிலில் அமர்ந்து அவளை படம் பிடிக்க
தொடங்கினான்.
அவள் என்ன கூறுகிறாள் என்பது தெளிவாக பதிவாகவில்லை என்றாலும் விழி
மூடி நாண புன்னகையுடன் அவள் வாய் அசைப்பது தெளிவாக பதிவாகியது. அடக்கப்பட்ட
சிரிப்புடன் அவளை படம் பிடித்து கொண்டிருக்க, அவளின் கலைந்த கூந்தல் அவள் முகத்தை மறைத்தது. ஒரு விரல் கொண்டு
மென்மையாக அதை ஒதுக்கி காது மடல் பின்னே விட்டவன், கேமராவை அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு, அதிகாலை வேளையிலும் மறையாத
வெண்ணிலவாய் பிரகாசிக்கும் தன் காதல் மனைவிக்கு இன்னும் அழகு சேர்க்கும் விதமாக
மேஜை மீது இருந்த பிளவர் வாசில் இருந்து லில்லி பூ ஒன்றை எடுத்து அவள் காது மடல்
அருகில் இருந்த முடியில் சொருகினான்.
கனவில் அவனுடன் காதலித்து கொண்டிருந்தவள், அவன் தன்னை நெருங்கிய நேரம்
தூக்கத்தில் உலறிய வார்த்தைகளை நிஜத்தில் செய்தே விட்டாள். அவன் விரல்கள் அவளை
தீண்டிய நொடி அவனை உணர்ந்தவள் அவனை தன்னை நோக்கி இழுத்து இதழ் அணைக்க, முதலில் தடுமாறி விலக
முயன்றவன் அவள் கிடுக்கு பிடியிலும் அவள் முத்தத்திலும் அவன் உணர்வுகளும் தூண்ட பட
அனைத்தையும் மறந்து அவள் செயலை தனதாக்கி இவன் வேலையை துவங்க, அப்போது தான் நிதர்சனம்
புரிந்து கண் விழித்தவளும் முதலில் அதிர்ந்தாலும் தன்னவன் முத்தத்தில் விழி மூடிட, அடுத்த கட்டத்திற்கு
முன்னேறினார்கள் இருவரும்.
நேற்றைய இரவில் ஊடலில் ஆரம்பித்த கூடல் விடியலிலும் தொடர்ந்து
கொண்டிருக்க, உச்சம்
தொட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்து அருகில் படுத்தவன் அவளை தன் கைவளைவில் கொண்டு
வந்து, "ஹனி..
இனி ஒர்க் பண்ணும் போது வந்து டிஸ்டர்ப் பண்ணாத. அப்படி பண்ணா அந்த வேலையை
விட்டுட்டு இந்த வேலையை தொடங்கிருவேன்" என்று குறும்பாக மிரட்டல் ஒன்றை
விடுத்தான். உன்னை பார்த்தாள் என் கவனம் சிதறும், என் வேலையும் எனக்கு முக்கியம் என்று நினைத்து அப்படி
சொன்னான்.
அவளும் அவன் வெற்று மார்பில் இருந்த தலையை விலக்காது "ஹ்ம்ம்
" என்று மட்டும் பதில் அளித்து இருந்தாள்.
சூரியன் செவ்வென தன் வேலையை தொடங்கி இருக்க, தாமினி அவனுடன் இருக்கும்
ஒவ்வொரு நிமிடங்களையும் சந்தோசமாக கழிக்க முடிவு செய்து அன்றைய நாளை துவங்கி
இருந்தாள். ஆனால் அவனோ! குளித்து விட்டு வெளியே வந்தவள் கையை
பற்றி "ஹனி.. சீக்கிரம் கிளம்பு நாம உடனே ஊருக்கு போகணும்" என்று
அவசரபடுத்தும் குரலில் கூறி, நிற்க
நேரம் இல்லாமல் இருவர் பெட்டியையும் கட்டிலில் எடுத்து வைத்து அலமாரியில் அடுக்கி
வைத்திருந்த மொத்த உடைகளையும் குப்பை போல் அள்ளி போட்டு கொண்டிருந்தான். அவன்
முகமோ இறுகி போய் இருக்க, ஏதோ
சரியில்லை என்று மட்டும் புரிந்தது
அவளுக்கு.
மேலும் அவன் செயலும், பதற்றமும் பயத்தை கொடுத்தது. 'இவன் பதறுகிறான் என்றாள் ஏதாவது விபரீதம் நடந்து விட்டதா? அய்யோ தாத்தாவிற்கு ஏதேனும்
நேர்ந்து விட்டதா?' என்று
அச்சம் கொண்டவள் அவனிடம் அதை கேட்க, அதன் பிறகே அவனுக்கும் தன் அவசரம் அவளுக்கு பயத்தை தான் உண்டு
பண்ணும் என்பதை புரிந்து கொண்டு,
"வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்க.. அபீஷியல் வேலையா உடனே சென்னைக்கு
போகணும்" என்று சொல்ல, அவளோ
"வேலை விசயமா? இன்னும்
ரெண்டு நாள் தானே, வெகேஷன்
முடிச்சிட்டே போகலாமே" என்று அமைதியான குரலில் கேட்டாள்.
அங்கு சென்றால் வேலை வேலை என்று ஓடி தன்னுடன் நேரம் செலவிட மாட்டான்
என்ற எண்ணத்தில். இன்னும் இரு தினங்களாவது அவனுடன் ஒன்றாய் செலவிட வேண்டும் என்று
நினைத்து கேட்டாள்.
"ஹனி இப்போ பேசுறதுக்கு எல்லாம் நேரம் இல்ல. கொஞ்சம் சீக்கிரம்
கிளம்பு" என்று கைகள் பெட்டியை பூட்ட போராடி கொண்டிருக்க தலையை மட்டும்
தூக்கி அவளிடம் கூறினான். அந்த பெட்டி முழுவதும் துணிகள் அடைத்து கொண்டிருக்க, அதை பூட்டுவது அவனுக்கு
பெரும் பாடாக தான் இருந்தது.
"இத ஏன் பூட்ட முடியல?" என்று கேட்டவனை தள்ளி கொண்டு உள்ளிருந்த உடைகளை
எல்லாம் அவள் வெளியே எடுத்து போட,
"ஹனி என்ன பண்ற?"
என்று சீறினான்.
"இப்படி குப்பையை அள்ளி போடுற மாதிரி போட்டா எப்படி பூட்ட முடியும்.
அது மட்டுமில்ல திங்ஸ் அதிகமா இருக்கு. இங்க இருக்க பெட்டி போதாது " என்று
அவள் கூறிக் கொண்டே ஒழுங்காக அடுக்கி கொண்டிருந்தாள்.
"வரும் போது எல்லாமே இதுக்குள்ள அடங்குச்சே எக்ஸ்டிரா இடம் வேற
இருந்துச்சே" என்று கேட்க,
"வந்தது போல போக முடியுமா?" என்று கேட்டு நக்கலாக அவனை பார்த்தவள், "இங்க
வந்து எனக்காகவே ஒரு பெட்டி நிறைய திங்ஸ் வாங்கி கொடுத்து இருக்க, அதெல்லாம் என்ன பண்றது?" என்று
இங்கிருந்து கிளம்பும் கடுப்பில் எதிர் கேள்வி கேட்டவளை அழுத்தமாக பார்த்தவன் போன்
செய்து புது பெட்டி வரவழைத்து ரூமை காலி செய்து அங்கிருந்து கிளம்பினர்.
விமான பயணமாக சென்னை வந்து இறங்கினர் இருவரும். அவன் வருவதை
முன்கூட்டியே அறிவிக்காததால் தாத்தாவும் ரியானும் ஆபீஸ் சென்றிருக்க, வீட்டிற்கு வந்தவன்
பெட்டிகளை எல்லாம் வேலைக்காரர்களிடம் எடுத்து வைக்க சொல்லிவிட்டு, தன்னிடம் எதுவும் பேசாமல்
அவள் அறைக்குள் நுழைய இருந்தவள் கையை பிடித்து தடுத்து, பின்னால் பெட்டியை தூக்கி
வந்த வேலைகாரரிடம் "ரெண்டு பேரோட பேக்கையும் இந்த ரூம்லயே வச்சிருங்க"
என்று கூற, அவனை
கேள்வியாக பார்த்துக் கொண்டு இருந்தவளிடம் "நீ எப்பவும் என் கூடவே
இருக்கணும். இன்னும் எதுக்கு தனி தனி ரூம்" என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டு
"நல்லா ரெஸ்ட் எடு ஒரு இம்போர்டென்ட் வேலை இருக்கு முடிச்சிட்டு
வந்துடுறேன்" என்று கூறி சென்றான்.
தாமினி தான் அவனை போல் சட்டென்று முகத்தை மாற்றி கொண்டு உணர்வுகளை
அடக்க முடியாமல் திணறினாள்.
வீட்டிலிருந்து நேராக அவர்களின் தலைமை அலுவலகத்திற்கு வந்தவன்
தாத்தாவையும் ரியானையும் லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டான். "உங்களால முடியலைனா
ஒரே ஒரு கால் பண்ணியிருந்தா நான் உடனே வந்து இருப்பேன்ல்ல. அவரோட உதவி எதுக்கு
கேட்டிங்க?" என்று
பொரிந்து தள்ள, வின்சென்ட்டும்
ரியானும் அவனின் திடீர் வரவால் அதிர்ந்து தவறு செய்து மாட்டிக் கொண்ட குழந்தை போல
முழித்துக் கொண்டிருந்தனர்.
ஜார்ஜ் புதிதாக ஒப்பந்தம் செய்திருந்த புராஜக்ட் விரைவில் முடித்து
கொடுக்க வேண்டும் என்று இருக்க,
தன் பேரன் வாழ்வில் அக்கறை கொண்ட அந்த பெரியவர் அவன் சந்தோசமாக ஒரு
வாரம் கழித்து விட்டு வரட்டும் என்று அவனை அனுப்பி வைத்தவர், அவன் இதை காரணம் காட்டி
முதலில் மறுத்த போது தானும் ரியானுன் பார்த்து கொள்வதாக கூறி தான் அவனை சமாதானம்
செய்து அனுப்பி வைத்திருந்தார்.
ஆனால் அவரின் வயோதிகமும் ரியானின் அனுபவமில்லா அறிவும் அந்த
புராஜக்ட்டை கையாள அவருக்கு ஒத்துழைக்கவில்லை. இதை முடிக்காமல் தோல்வி அடைந்தால்
ஜார்ஜ் இத்தனை தூரம் கஷ்டபட்டு உயர்த்திய தன் வியாபார சாம்ராஜ்யத்திற்கு இழுக்கு
உண்டாகும் என்று எண்ணியவர், பேரனை
அழைத்து அவன் சந்தோசத்தை கெடுக்க விரும்பாது தன் மகனின் உதவியை நாடினார்.
பிராகாஷும் தன் தந்தைக்காகவும் மகனுக்காகவும் அந்த புராஜக்ட்டை விரைவாக முடிக்க
உதவினார்.
வழமையை விட தான் இல்லாமலே
எல்லாம் அதி விரைவாக முடிவதை எண்ணி முதலில் தாத்தாவின் திறமையை பாராட்டியவன்
மனதில் சிறு நெருடல் தோன்ற, அங்கிருந்தே
ரகசியமாக ஆள் வைத்து கண்காணித்த போது அனைத்தும் புல பட்டது.
தன் தந்தை இதில் ஈடுபட்டுள்ளார் என்பதை அறிந்த அடுத்த கணம் இங்கு
வந்து இறங்கி விட்டான்.
'இவனுக்கு எப்படி தெரிந்தது? யார் கூறி இருப்பார்கள்?' என்ற யோசனையில் தாத்தா வேண்டியை பார்க்க, அவர் குற்ற சாட்டை
உணர்ந்தவன் 'சத்தியமா
நான் எதுவும் சொல்லல' என்று
கண்களால் கூறி தன்னை நிரூபிக்க போராடிக் கொண்டிருந்தான்.
பெரியவரின் பார்வை திசையை உணர்ந்த ஜார்ஜ் "அவனை எதுக்கு
முறைக்குறீங்க? அவனும்
துரோகி தான்" என்று கூறி அவன் மூலம் தனக்கு தகவல் வரவில்லை என்று அவனையும்
திட்டி தீர்த்தான்.
மூவரும் செய்த தவறிற்காக அமைதியாக நிற்க, இவர்களை திட்டி மட்டும் இனி என்னவாக போகிறது என்று நொந்தவன், தன் தந்தையின் உதவியோடு தயார் செய்திருந்த அத்தனை கோப்புகளையும் நிராகரித்து, புதிதாக தயார் செய்யுமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தான். அவர்கள் வாழ்வில் தனக்கு இடம் இல்லையெனில் தான் மட்டும் ஏன் அவர்களை நாட வேண்டும். எந்த சூழலிலும் அவர்களுக்கும் தன் வாழ்வில் எந்த இடமும் கொடுக்க போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான்.
Comments
Post a Comment