விலை : 3
விலை : 3
தாமினியின் பேச்சில் மற்ற இருவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்க, ஜார்ஜோ நரம்புகள் புடைக்க
அவள் அறைந்து சாத்தி சென்ற கதவை பார்த்திருந்தவன் "ஹவ் டேர், எவ்வளவு தைரியம் இருந்தா
மறுபடியும் அவ எங்கிட்ட இப்படி பேசியிருப்பா?" என்று கத்த, அவன் கோபத்தில் கூறிய வார்த்தையை பிடித்துக் கொண்டு விளக்கம் கேட்க
ஓடி வந்தான் ரியான்.
"ப்ரோ.. இப்போ என்ன சொன்ன? மறுபடியுமா? அப்போ
திட்டு வாங்குறது இது ஃபர்ஸ்ட் டைம் இல்லையா? உனக்கு அந்த பொண்ண முன்னமே தெரியுமா? எப்படி தெரியும்?"
ஆர்வமாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்ற ரியானை வெற்று பார்வை
பார்த்தவன் "ஒரு ஆக்சிடன்ட்ல மீட் பண்ணோம் " என்றான் மொட்டையாக.
"ஆக்ஸிடென்ட்டா?"
பெரிதாக வாயை பிளந்த ரியான், "இப்போ, என்னல்லாமோ பண்ணிட்டு ஜஸ்ட் ஆன் ஆக்ஸிடென்ட்னு கூலா சொல்றாங்க ப்ரோ..
உங்களுக்குள்ள என்ன ஆக்ஸிடென்ட் நடந்துச்சு?" என்று குறும்பாக கண் சிமிட்டி ஆர்வமாக ரியான்
கேட்க,
அவனை கேவலமாக பார்த்த ஜார்ஜ், "வயசுக்கு ஏத்த மாதிரி பேசு டா.. அண்ட் ரொம்ப
அதிகமா யோசிக்காத இட்ஸ் ஜஸ்ட் ஆன் ரோட் ஆக்ஸிடென்ட்" என்றான்.
"ரோட் ஆக்ஸிடென்ட்டா?
யாருக்கு என்னாச்சு?"
என்று மறுபடியும் அதிர்ச்சியாக,
"அவளால எனக்கு 20 கோடி
லாஸ் ஆச்சி" என்றான் சற்று கோபமாக.
"என்ன லாஸ்? விளக்கமா
சொல்லு ப்ரோ"
'அதெல்லாம் இப்போ தேவையா?' என்பதை போல் பார்த்தவனை "கண்டிப்பா நீ சொல்லியே ஆகணும்"
என்று ரியான் பிடிவாதமாக கேட்க,
ஜார்ஜ் அவளை முதலில் பார்த்த நாளை நினைவு கூர்ந்தான்.
நான்கு வருடங்களுக்கு முன்..
"பாஸ், ஃபோர்டு
ஆஃப் டிரக்டர்ஸ் எல்லாரும் வந்துட்டாங்க, நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க" என்று ஜார்ஜின் பி.ஏ வேல்பாண்டி
அலைபேசி வாயிலாக அவனுக்கு தகவல் கொடுக்க, "யா.. ஐ அம் ஆன் தி வே.. இன்னும் 10 மினிட்ஸ்ல அங்க
இருப்பேன்" என்று அவனுக்கு பதில் அளித்தவன் கையில் இன்னும் வேகமாக பறந்தது
அந்த உயர் ரக கார்.
எப்போதும் எந்த இடத்திற்கும் தாமதமாக செல்வது, மற்றவரை காத்திருக்க
வைப்பது அவனின் வழக்கம் கிடையாது. காலை பதினோரு மணிக்கு இந்த மீட்டிங் அரெஞ்
செய்திருக்க, அதற்கு
முன் வேறொரு மீட்டிங்கிற்கு சென்றவன் அது முடிய தாமதமானதே இப்போது பிரச்சனையாகி
போனது. தன் கம்பெனி சார்பாக தன் உதவியாளன் வேன்டியை (வேல்பாண்டி சுருக்கம்)
முன்னமே அனுப்பி வைத்திருந்தான்.
காரின் வேகத்தை இன்னும் அதிகரிக்க அதுவும் காற்றை கிழித்து பறந்து
கொண்டிருந்தது தார் சாலையில்.
ஜார்ஜ் என்று ஒருவன் வருவான் அவன் கடந்து சென்ற பிறகு நான் என்
வேலையை செய்கிறேன் என்று காத்திராமல் சாலையில் பொறுத்த பட்டிருந்த டிராபிக்
சிக்னல் தன் பச்சை நிற விளக்கை அனைத்து சிவப்பை ஒளிர் விட, சிக்னல் மாறுவதற்குள்
கடந்து விட எண்ணி வேகமாக வந்தவன் சிக்னல் விழவே, முன் நின்றிருந்த ஸ்கூட்டி மீது மோதி "ஓ
ஷிட்" என்று கையை ஸ்டியரிங்கில் குத்தி நிறுத்தினான்.
"ஐயோ.. அம்மா...." என்று அலறியபடி வெள்ளை கோட்டை தாண்டி சென்று
விழுந்தவளை அங்கு பைக்கிலும் ஆட்டோவிலும் இருந்தவர்கள் வந்து தூக்கி விட்டனர்.
"உனக்கு எதுவும் ஆகலையே மா?" என்று சிலர் அவளிடம் அக்கறையாக விசாரிக்க, எழுந்தவளோ காலை நொண்டியபடி
தன்னை இடித்து கீழே தள்ளிய கார் அருகில் வந்தாள்.
"டேய் கண்ணு தெரியாத கபோதி வெளிய வாடா.. கூலிங்
கிளாஸ் போட்ட குருட்டு குரங்கே,
சிக்னல் போட்டுருக்கது தெரியல... இடிச்சதும் இல்லாம தெனாவட்டா
இன்னும் உள்ள உட்கார்ந்து இருக்க,
வாடா வெளிய" என்று கத்த, அங்கு கூட்டம் கூடியது.
வேறு வழியின்றி ஜார்ஜ் காரை விட்டு இறங்கி 'என்ன?' என்று திமிராக பார்க்க, "எவ்வளவு
ஏத்தம் இருந்தா? இடிச்சத்தும்
இல்லாம திமிரா வேற பார்க்கிற, உன்னால
என் கால் உடஞ்சி போச்சு.. என்னால நடக்கவே முடியல" என்றவளை ஏற இறங்க
பார்த்தவன், "இப்போ
நடந்து தானே வந்த" என்றான்.
மேலும், "இங்க
பாரு எனக்கு இப்போ உன்னோட புலம்பல் எல்லாம் கேட்க நேரம் இல்ல, ஐ ஆம் கெட்டிங் லேட் , நான் அவசரமா போகணும்"
என்று கூறி கார்
கதவை திறக்க போக, அவளோ
அவனுக்கு பக்கவாட்டில் நின்று கார் கதவை அறைந்து சாத்தி விட, இதை எதிர்பாரதவன் கையை பதம்
பார்த்தது அந்த காரின் கதவு.
"ஆ.." என்று கத்திய படி தன்னை நோக்கி கையை எடுத்து கொண்டவன்
"இடியட்" என்று சத்தமாக திட்ட, "இங்க எல்லாரும் வேலைவெட்டி இல்லாம ரோட்டுல
சுத்திட்டு இருக்காங்களா? என்ன டா
கார வச்சி ஏத்தி கொல்ல பார்த்திட்டு அப்படியே நைஸா நழுவ பார்க்கிறியா?" என்றாள்
இன்று அவனை ஒரு வழி பண்ணாமல் விட போவதில்லை என்ற முடிவில்.
"இப்போ உனக்கு என்ன வேணும்?" என்று அவன் கடுப்பாக கேட்க,
"எனக்கு ஆன டேமேஜ்க்கும், என் வண்டிக்கு ஆன டேமேஜ்க்கும் காச எடுடா" என்று அவன் சட்டையை
பிடித்து கேட்டாள்.
பணம் என்று வந்து நின்றதில் அவளை கேவலமாக பார்த்தவன், "ஏய் கையை
எடு" என்று அலட்சியமாக அவளை தள்ளி விட்டு, "பணத்துக்காக அலையிற கூட்டம்" என்று
வெளிப்படையாகவே கேவலமாக பேசி தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு பர்ஸை தேடினான்.
அங்கு அது இல்லாமல் போகவே, சற்று குனிந்து காருக்குள் அலச, இன்று அவன் கெட்ட நேரம் அவன் அருகில் நின்றிருந்ததோ? என்னவோ? இன்று அவன் பர்ஸ் எடுத்து
வரவில்லை. மறந்து விட்டு வந்தது நினைவில் வர,
"ஓ.. ஷிட்" என்று தன்னையே நொந்து கொண்டவன் வெளியே திமிராகவே, "இப்போ
எங்கிட்ட காசு இல்ல, இது
என்னோட கார்ட் ஆபீஸ்ல வந்து காசு வாங்கிக்கோ" என்று அவள் கையில் தன் விசிடிங்
கார்ட்டை கொடுக்க,
"என்னது காசு இல்லயா?
டேய் உண்மைய சொல்லு?
இது திருட்டு வண்டி தானே? அதான் இவ்வளவு வேகமா வந்தியா? எங்க இருந்து திருடிட்டு வர்ற?" என்று அவனுக்கு திருட்டு பட்டம் சூட்ட,
அதில் கடுப்பானவன்,
"லுக், நான்
யார்னு தெரியுமா? ஜி ஆர்
குரூப்ஸ் கம்பனியோடா எம் டி" என்று கர்வமாக சொன்னான்.
"ஓ.. அது என்ன பெரிய மன்னாரன் கம்பெனியா? பெரிசா கார்ட் கொடுக்க வந்துட்டான்"
என அவன் கொடுத்த கார்ட்டை கிழித்து அவன் மீது வீசி எரிந்தவள் "இது மாதிரி
ஆயிரம் போலி கார்ட் எனக்கும் அடிக்க தெரியும், திருட்டு பயலே" என்றாள்.
மறுபடியும் அவனை திருடன் என்று சொன்னதிலும் காரட்டை தூக்கி
எரிந்ததிலும் ஜார்ஜின் சுய கௌரவம் தலை தூக்க, "மறுபடியும் என்னை திருடனு சொல்லாத" என்று
விரல் நீட்டி எச்சரிக்கை செய்தான்.
அவன் நீட்டிய விரலை மடக்கியவள் "திருடன திருடனு தான்
சொல்வாங்க... திருட்டு பயலே" என்று அவன் முகத்திற்கு நேராக கோபமாக கூற, அவளை அனல் தெறிக்கும்
பார்வை பார்த்தவன், தன்னை
சுற்றி பார்க்க, இவர்கள்
சண்டையை ஊரே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. எல்லார் முன்னிலும் இப்படி
தன்னை காட்சி பொருளாக மாற்றியவள் மீது கோபம் பொங்க, அவள் தன்னை அவமான படுத்தி கொண்டிருப்பதை அவனால்
சீரணித்து கொள்ள முடியாமல் கோபத்தில் கண்கள் சிவக்க,
"எங்கிட்ட யாரும் இப்படி மரியாதை குறைவா பேசினது இல்ல, இன்னைக்கு இவ்வளவு பேர்
முன்னாடி என்ன அவமானபடுத்திட்டல்ல, நல்லா கேட்டுக்கோ,
என் கம்பனி வாசல்ல,
என் முன்னாடி தலை குனிஞ்சி, என்கிட்ட பிச்சை எடுக்குற நிலமை உனக்கு ஒருநாள் கண்டிப்பா வரும்.
அப்போ தெரியும் இந்த ஜார்ஜ் யாருனு?" என்று ஆணவத்தின் உச்சத்தில் சீறி பாய்ந்த ஜார்ஜின்
குரலை தொடர்ந்து,
"அப்படி ஒரு நாள் வந்துச்சுனா இந்த தாமினி நைலான் கயித்துல தூக்கு
போட்டுபா டா" என்று அவனுக்கு சிறிதும் குறையாத கோபத்தில் ஒலித்தது தாமினியின்
குரல்.
'விட்டா நான் தான் அம்பானி பையனு சொல்லுவான். என்னை பார்த்த ஈனா வானா
மாதிரி தெரியுதா?' என்று
நினைத்தவள்,
"திருட்டு பயலுக்கு எவ்வளவு திமிர். இருடா இப்பவே உன்ன போலீஸ்ல
புடிச்சி கொடுக்கிறேன்" என்று சுற்றும் முற்றும் பார்த்து "போலீஸ்
போலீஸ் " என்று கத்த,
"அய்யய்யோ, இந்த
பொண்ணு காரியத்தையே கெடுத்துரும் போலயே" என்று கூட்டத்தில் நின்றிருந்த
ஒருவன் தாமினி அருகில் வந்து,
"என்னமா நீ விவரம் தெரியாத பொண்ணா இருக்கிறியே, போலீஸ்க்கு போனா நீ
இவங்கிட்ட இருந்து காச வாங்கி அவங்களுக்கு கொடுக்க தான் சரியா இருக்கும். உனக்கு
தான் பாதிப்பு அதிகமாகும். பாரு கால்ல அடிப்பட்டு இரத்தம் வேற வருது. ஹாஸ்பிடல்
செல்வுக்கு கூட பணம் தேறாது" என்று ரகசியமாக அவளை ஏற்றி விட, சிறிது யோசித்தவளுக்கு அவர்
கூறுவதும் சரியாகவே தோன்றியது.
"சரி இப்போ என்ன பண்ணலாம்?" என்று அவரிடமே ஐடியா கேட்க, அவரோ "பார்த்தா பெரிய
பணக்காரன் மாதிரி தான் தெரியுது,
கழுத்துல கையில போட்டிருக்கத கழட்டி கேளு" என்று இவர்கள்
ரகசியம் பேசி திரும்புவதற்குள் ஜார்ஜ் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நழுவி
இருந்தான்.
அவன் காரில் ஏறி சென்றதை பார்த்து தாமினியோ "டேய் திருட்டு
ராஸ்கல், நில்லு
டா" என்று கத்தியபடி "உன்னால தான்யா அவன் போய்ட்டான்" என்று
இவ்வளவு நேரம் தனக்கு ஐடியா கொடுத்தவனை முறைக்க, "ரெண்டு பேருக்கும்
பஞ்சாயத்து பண்ணி நானும் எதும் தேத்தலானு பார்த்தா? என் பொழப்புளையும் மண்ணை அள்ளி போட்டுட்டு
போய்ட்டான் மா" என்றார் ஏமாற்ற குரலில்.
"அன்னைக்கு அவளால அந்த புராஜக்ட் என் கை விட்டு போயிடுச்சு"
என்று கோபமாக கூறியவன் அப்போது தான் தன் தாத்தாவை கவனித்தான்.
அவர் இன்னும் அதே உறைந்த நிலையில் இருக்க, "தாத்தா"
என்று அவரை பதற்றமாக அழைத்தான் ஜார்ஜ்.
"டோண்ட் வொர்ரி ப்ரோ. படி-க்கு இது தான் ஃபர்ஸ்ட் டைம்ல அதான் ஷாக்ல
இருந்து இன்னும் வெளிய வரல. அவர் வயசுக்காவது அந்த பொண்ணு கொஞ்சம் மரியாதை
கொடுத்து இருக்கலாம்" என்ற ரியான் "படி" என்று தன் தாத்தாவின் தோளை
பற்றி உலுக்கி நிகழ்வுக்கு கொண்டு வந்தான்.
"ஹாங்.. அந்த பொண்ணு போயிடுச்சா டா?" என்று தூக்கத்தில் இருந்து
விழித்தவர் போல் அவர் கேட்க, அவரை
பார்த்து சிரித்த ரியான் "அதெல்லாம் போயிடுச்சு படி, நாம அடுத்த பொண்ண வர
சொல்லலாமா?" என்று
கேட்க,
உடனே "நோ.... இன்டர்வியூ கேன்சல் பண்ணுங்க" என்றான் ஜார்ஜ்
அழுத்தமான குரலில் முடிவாக.
'மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா?' என்னும் ரீதியில் பெரியவர்
பார்க்க, ரியான்
கள்ள சிரிப்புடன், "அப்போ, இப்போ போன பொண்ண கன்பர்ம்
பண்ணிடலாமா?" என்று
கேட்க, மற்ற
இருவரும் "வாட்? " என்று
அதிர்ந்து அவனை பார்த்தனர்.
இவர்கள் இருவரின் முதல் சந்திப்பை பற்றி எதுவும் அறியா பெரியவர் 'இவனுக்கு கிறுக்கு
புடிச்சிருச்சா? அந்த
பொண்ண போய் செலக்ட் பண்ண சொல்றான்?' என்று பார்க்க, ஜார்ஜும்
அதையே தான் யோசித்தான்.
ஜார்ஜ், "ஆர் யு
மேட் " என்று இளையவனை பார்த்து கேட்க,
பெரியவரும் "எதை வச்சி அந்த பொண்ண செலக்ட் பண்ண சொல்ற?" என்று
கேட்டார்.
இருவரையும் சிறு புன்னகையோடு பார்த்தவன், "படி
இவ்வளவு நேரம் நாம ரெண்டு பேரும் மட்டும் தானே இன்டர்வியூ பண்ணிட்டு இருந்தோம்.
அந்த பொண்ணு என்டர் ஆனதும், இந்த
இன்டர்வியூல இன்டர்ஸ்ட்டே இல்லாத ப்ரோவும் எதுக்கு என்ட்ரி கொடுக்கணும்?" என்று
தன் மனதில் தோன்றிய முதல் கேள்வியை முன் வைத்தான் ரியான்.
அவனை பார்த்து அலட்சியமாக புன்னகைத்தவன், "பிகாஸ்
தப்பி தவறி கூட நீங்க அந்த பொண்ண செலக்ட் பண்ணிட கூடாது என்கிறதுக்காக தான்
வந்தேன்" என்றான்.
"அந்த பொண்ணோட குவாலிஃபைக்கேஷன்க்கு நாங்களே ரீஜெக்ட் பண்ணி
இருப்போம். நீ உள்ள புகுந்து உன் மனசுல அவ இருக்கானு கன்பார்ம் பண்ணிட்ட"
என்று தன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தான்.
"ரெடிக்யூலஸ்.. இந்த தாட் உனக்கே சில்லியா இல்ல?"
"சரி அதை விடு.. உனக்கு லிண்டா நியாபகம் இருக்கா? " என்று
சம்மந்தமின்றி கேட்க,
அவனை நெற்றி சுருக்கி புரியாத பார்வை பார்த்த ஜார்ஜோ, இல்லை என்றான் ஒரே வார்த்தையில்.
"சனா, ஸ்ரீநிதி, லேகா" என்று ஒரு சில
பெண்கள் பெயர்களை கூற, எல்லாவற்றிற்கும்
இல்லை என்று மறுப்பாக தலை ஆட்டியவன், இறுதியில் பொறுமை இழந்த, "இப்போ எதுக்கு இதெல்லாம் கேட்க்குற? இவங்களாம் யாரு?" என்று
கேட்டான்.
தன் மச்சினனை அர்த்தமுள்ள பார்வை பார்த்தவன் தன் தாத்தாவிடம்
"படி நீ சொல்லு, உனக்கு
இவங்கள நியாபகம் இருக்கா?"
என்று கேட்க, அவரும்
அவன் எதற்கு கேட்கிறான் என்பது தெரியவில்லை என்றாலும், நல்லது நடந்தா சரி என்று
"ஹ்ம்ம்.. நல்லா தெரியுமே. எல்லாரும் நம்ம பிஸ்னஸ் பர்ட்னர்ஸ் பொண்ணுங்க.
ஜார்ஜ கூட கல்யாணம் பண்ணிக்க கேட்டாங்க" என்று உண்மையை கூறினார்.
தனக்கு தேவையானதை பெரியவரிடம் இருந்து பெற்றுக் கொண்டவன்
"கேட்டியா ப்ரோ.. இவங்க எல்லாம் நம்ம பார்ட்னர்ஸ் டாட்டர்ஸ். அண்ட் நீ
கொடுக்குற பிசினஸ் பார்ட்டீஸ் எல்லாத்துலையும் உனக்காகவே கலந்துப்பாங்க. இப்போ
ரீசெண்ட் ஆஹ் நாலு நாள் முன்னாடி நியூ புராஜக்ட் சக்ஸஸ் பார்டில கூட கலந்து
கிட்டாங்க" என்று அவன் முடிக்கும் முன்னமே..
"அதுக்கு என்ன? எனக்கு
பார்ட்னரை தெரிஞ்சா போதும் அவங்க பொண்ண தெரிஞ்சி வச்சிக்க அவசியம் இல்லை"
என்றான் வெடுக்கென்று.
"கரெக்ட் ப்ரோ..பட் இதுல நோட் பண்ண வேண்டிய விசயம் என்னனா, நாலு நாள் முன்னாடி பார்த்த
பொண்ணுங்கள நியாபகம் இல்லாத போது,
அவசியம் இல்லாத போது.. நாலு வருஷம் முன்னாடி பார்த்த பொண்ணு இன்னும்
நியாபகத்துல இருக்கிறானா?"
என்று வார்த்தையை முடிக்காமல் கேள்வியாக அவனை பார்த்தான்.
"ஏன்னா.. ஷி இன்சல்ட் மீ " என்று அதற்கும் பதில் அளித்தான்
ஜார்ஜ்.
பெரியவருக்கு இந்த செய்தி புதிதாக இருக்க அவர் என்ன விடயம் என்று
ரியானிடம் கேட்டார்.
"படி நான் உனக்கு அப்புறம் இதை தெளிவா சொல்றேன்" என்றவன்
"கமான் ப்ரோ.. நீ எங்களுக்கு பதில் சொல்ல முயற்சி பண்ணாத. நான் கேட்ட கேள்விகளுக்கு
உன் மனசுகிட்ட நீயே பதில் கேளு.. அண்ட் நீ இப்போ இருக்கிற பிஸி செடியுல்ல அந்த
பொண்ணுலாம் உனக்கு ஒரு மேட்டரே கிடையாது.. கொஞ்சம் பொறுமையா யோசி ப்ரோ"
என்றவன் இண்டர்காமில் அவனுக்கு காபி வரவழைத்து, "இப்படி உட்கார்ந்து காபி குடிச்சிட்டே யோசி..
நாங்க இன்டர்வியூக்கு வந்த மத்தவங்களை அனுப்பி வச்சிட்டு வர்றோம். போலாமா
படி" என்று ஜார்ஜிற்கு தனிமையை ஏற்படுத்தி கொடுத்து வெளியேறினர் இருவரும்.
ஜார்ஜின் சிந்தனைகளும் ரியான் கூறி சென்றதில் நிலைத்து இருந்தது.
Comments
Post a Comment