Extra bonus..
Extra bonus..
சில்லென்ற குளிர் உடலை ஊடுருவி செல்ல, கால் பாதங்கள் வேறு ஆயிரம் பனிக்கட்டிகள் மேல்
இருப்பது போல் விரைத்து கொள்ள,
தான் மூடி இருந்த போர்வையுனுள் தன் காலோடு சேர்த்து உடலையும்
சுருக்கி கொண்டாள் தாமினி.
கரு விழிகள் உருட்டி மெல்ல கண் திறந்து பார்க்க, எதிரில் கண்ணாடி தடுப்பில்
பனி பொழிவு ஏதோ அசுர மழை பெய்ந்தது போல், நீர் துளிகளாய் வழிந்து ஓடி கொண்டிருந்தது.
நன்றாக கண்களை திறந்து அறையை பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள்.
அடுத்த நொடியே போர்வையை உதறி தள்ளி கட்டிலை விட்டு இறங்கியவள்
"ஜார்ஜ் ஜார்ஜ்..." என்று கத்தி அழைக்க, அவன் அங்கு இருந்தால் தானே பதில் அளிக்க. அந்த
அறையை திறந்து வெளியே வர, தாய்லாந்தில்
ஹனிமூன் சென்ற போது தங்கியது போலானா காட்டேஜ்.
"என்ன இடம் இது?"
என்று எல்லா இடங்களிலும் தன்னவனை தேட, பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். வெளி கதவும் திறக்க
முடியமல் போக, ஏகத்துக்கும்
குழம்பி போனாள்.
"நான் எங்க இருக்கேன். ஒருவேளை கனவுல இருக்கேனா?" என்று
எண்ணியவளோ, "முழுச்சுக்கோ
மினி முழுச்சுக்கோ" என்று கண்களை மூடி வல கையால் வலது நெற்றி ஓரத்தை அழுத்தி
தட்டி கண் விழித்து பார்த்தாள்,
எதுவும் மாற வில்லை,
அதே பூட்டிய காட்டேஜ் உள் தான் நின்றிருந்தாள்.
"என்ன இன்னும் அதே இடத்தில தான் நிற்கிறேன். ஒரு வேளை கனவுலயே எல்லாம்
நடக்குதா?" என்று
மருண்ட விழிகளை மேலும் உருட்டியவள்,
"கனவு களைய என்ன பண்ணனும்.. நல்லா தூங்கி விழிக்கணும். ஆஹ் அது தான்
சரி" என்று மீண்டும் மேலே படுக்கையறைக்கு வந்து கட்டிலில் விழுந்து விழி மூடி
சில வினாடி படுத்தவள்,
அடுத்த நிமிடமே பாய்ந்து எழுந்து, "இல்ல இது எதுவும் வொர்க் அவுட் ஆகாது. நல்லா
மாட்டிகிட்ட மினி... என்ன பண்றது?"
என்று யோசித்தவள் கண்களில் கண்ணீர் கட்டி கொள்ள,
இக்கட்டான சூழ்நிலையில் தன்னவனை தான் மனம் தேடி அலைந்தது.
"ஜார்ஜ்... " என்று உச்சரித்தவள் ஏதோ யோசனை வர, அங்கே இருந்த மேசையை அலசி
தன் போனை கண்டெடுத்து எடுத்தாள் கால் தன்னவனுக்கு.
இரண்டு மூன்று ரிங்கில் அட்டன் செய்ய பட்டது. அடக்கி வைத்திருந்த அழுகை
எல்லாம் கரை புரண்டு வந்து ஒப்பாரியே வைத்து விட்டாள்.
"ஜார்ஜ்... என்னை யாரோ கடத்திட்டாங்க.. இப்போ நான் எங்க இருக்கேனு
எனக்கே தெரியல.. நீ வந்து என்னை காப்பாத்தி கூட்டி போ.. " என்று சத்தமாக அழ,
எதிர் முனையில் சத்தமாக சிரித்தவனோ, "நான் தான் ஹனி உன்ன கடத்தி
கொண்டு வந்துருக்கேன். நான் கீழ தான் இருக்கேன் கீழ வா" என்று கூலாக சொல்லி
அழைப்பை துண்டித்தான்.
"ஜார்ஜ் கடத்தினானா?"
எதையும் யோசிக்கும் நிலையில் அவள் இல்லை, தன்னவனை கண்டால் போதும்
என்று அடித்து பிடித்து ஓடி வர,
அவனும் வெளி கதவை திறந்து உள்ளே வரவும் நேரம் சரியாக இருந்தது.
"ஜார்ஜ்....... " என்ற கூவலுடன் தாவி வந்து கட்டி கொண்டாள் அவன்
கழுத்தை. அவனோ இரண்டு கைகளிலும் காகித பையை சுமந்த படி அவளை அணைக்க முடியாமல்
கைகள் இரண்டையும் பாதியில் தூக்கிய படி நின்றிருந்தான்.
கணவன் மார்பில் சாய்ந்து நின்றவளோ, "நீ எங்க போயிருந்த? நான் பயந்துட்டேன் தெரியுமா?" என்று
சிறு விசும்பலுடன் கேட்டவள் சில நொடிகள் கழித்தே அவனை விட்டு விலகி நின்று, சந்தேகமாக அவனை பார்த்தாள்.
"இது என்ன இடம்? இங்க
எப்படி வந்தோம்?" என்று
கேட்க,
அவனோ தோளை குலுக்கியவன், கையில் இருந்த பொருட்களை உணவு மேஜை மீது எடுத்து வைத்த படி பதில்
அளித்தான்.
நேற்று இரவு ரியான் பிரச்சனை முடிந்த பிறகு, குழந்தைகளை அவர்கள் தாத்தா
பாட்டி அறையில் விட்டவன், எந்நாளும்
இல்லா திருநாளாக தாமினியை வற்புறுத்தி பால் குடிக்க வைத்து இருந்தான். அதில் தான்
தூக்க மாத்திரை ஒன்றை கலந்து அவள் துயில் கொண்ட பின் கடத்தி வந்திருந்தான்
பாரிஸ்க்கு, செகண்ட்
ஹனிமூன் அவள் தானே கேட்டாள். அதை நிறைவேற்றவே இப்படி ஒரு சர்ப்ரைஸ் அவளுக்கு.
"மேடம் இந்தியன் புட் தான் வேணும்னு கேட்பீங்க, அதான் தேடி கண்டு பிடிச்சு
வாங்கி வர லேட் ஆகிடுச்சு. அதுக்குள்ள எழுந்து ஒரு ஸ்கிரீன் பிளே உருவாக்கி
அழுதுட்டு இருக்க" என்று சொன்னபடியே உணவு பொருட்களை மேஜையில் பரப்பி வைத்தவன்
அவள் அருகில் வந்து அவள் கண்ணீரையும் துடைத்து விட்டு, "சாப்டலாமா?" என்று
கேட்டான்.
"இது பேரு சர்ப்ரைஸ் ஆஹ் கொஞ்சம் விட்டா சஸ்பென்ஸ்ல சமாதி ஆகியிருப்பேன்."
என்று முறைத்துக் கொண்டாலும், பல் கூட
விளக்க மறந்து அவன் வாங்கி வந்த உணவை வெளுத்து கட்ட ஆரம்பித்து இருந்தாள்.
பாதி வயிறு நிரம்பிய பிறகே எதிரில் நின்ற கணவன் கண்ணிற்கு தெரிய
"நீ சாப்பிடலாயா?" என்று
கேட்டாள்.
இது எப்போதும் வழக்கமாக நடப்பது தானே. அவளை பற்றி நன்கு அறிந்தவனும்
"பரவாயில்ல காலி பண்றதுக்கு முன்னமே என் நியாபாகம் வந்துச்சே!" என்று
அவளை கேலி செய்தபடி அவனும் உண்ண ஆரம்பித்தான்.
"என்னங்க..." தாமினி குரல் தான் மென்மையாக ஒலிக்க, வாயில் வைத்த உணவு புறையேறி
விட்டது அவனுக்கு.
பிறகு, திடீரென்று
மரியாதையான விழிப்பு கேட்டாள் அவனும் என்ன தான் செய்வான். ஏற்றுக் கொள்ள சிறிது
கால நேரம் ஆகும் தானே.
"என்னையா கூப்பிட்ட?"
கண்களில் குறும்புடன் சந்தேகமாக கேட்டவனை அனல் தெறிக்க பார்த்தவள், "இது
உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?"
என்று கேட்டாள்.
அவனோ, "இல்ல ஹனி
திடீர்னு கொஞ்சம் மரியாதையா கூப்பிட்டியா. அதான் கன்பியுஸ் ஆகிட்டேன்." என்று
சொன்னவன் "சரி அதை விடு என்ன விசயம் புதுசா மரியாதை எல்லாம் கொடுக்க முயற்சி
பண்ற." என்று கேட்டான்.
அவளோ, "புருஷன்னு
கொஞ்சம் மரியாதை கொடுக்க நினைச்சேன். நமக்கு செட் ஆகல, ஏதோ வேற்று கிரகவாசிய
பார்க்கிற மாதிரி ஃபீல் வருது." என்று இது தான் தான் அழைக்கும் முதலும்
கடைசியுமான மரியாதை விழிப்பு என்று சொல்லாமல் சொல்லியவளை பார்த்து சிரிப்பு தான்
வந்தது அவனுக்கு.
அதை விடுத்து, தான்
கேட்க வந்ததை கேட்டாள்.
"ஜார்ஜ்... உன்கிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்." என்றவளை
என்னவென்று புருவம் உயர்த்தி கேட்டான் அவன்.
"உனக்கு எப்படி என்மேல லவ் வந்துச்சு? ஏன் கேட்கிறேன் ஆஹ் முதல் சந்திப்பு சண்டை தான்.
அடுத்த சந்திப்பும் சண்டை தான். அப்படி இருக்கும் போது மூணாவது சந்திப்பில நீ
முழுசா காதல் மன்னனா மாற காரணம் என்ன?"
அவள் கேட்டு முடித்ததும் மெல்லிய புன்னகை ஒன்று இதழில் இழைப்பாற,
"முதல் முறை உன்னை பார்க்கும் போது பயங்கர கோபம் தான் இருந்துச்சு உன்
மேல, நாலு
வருசத்துல உன் நினைப்பு கொஞ்சம் கூட இல்லை. ஆனா மறுபடியும் உன்ன ஆபீஸ்ல பார்த்த
போது இந்த பொண்ணு எப்படி என் ஆபீஸ் உள்ள வரலாம்னு அப்பவும் கோபம் தான்
இருந்துச்சு.
நீ பேசிட்டு போன அப்புறம் ரியான் தான் ஏதேதோ சொல்லி மனச கலைச்சு, உள்ள இருந்த உன்னை வெளிய
கொண்டு வந்தான்.
உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும் வெளிய தைரியமா முறுகிட்டு நிற்கிற
உன்னோட ஆட்டிடியூட் பிடிச்சு இருந்தது. எதுவும் தெரியலை என்றாலும் எல்லாம் தெரிஞ்ச
மாதிரி காட்டிக்கிற அந்த கெத்து பிடிச்சு இருந்தது. கொஞ்சம் கூட யோசிக்காம
அன்னைக்கு என்னை மட்டும் இல்லாம தாத்தா ரியான் கூட திட்டுன அந்த அசட்டு தைரியம்
பிடிச்சு இருந்தது.
எல்லாத்துக்கும் மேல என்னை மெஸ்மரீசம் பண்ணி கட்டி போடுற இந்த மச்சம்
ரொம்ப பிடிச்சு இருந்தது." என்று அவள் கழுத்து குழி மச்சத்தை பார்த்து
கிறக்கமாக கூற, வழக்கம்
போல் அவன் பேச்சில் மயக்கம் கொண்டவளோ, சிறு நாண புன்னகையோடு விழி தாழ்த்தி கொண்டாள்.
"உன்னை யோசிச்ச அளவுக்கு யாரையும் அவ்வளவு நேரம் எடுத்து யோசிச்சது
கூட கிடையாது. அதுவே எனக்கு ஷாகிங்க் தான். அப்போ தான் புரிஞ்சுது, காதல் பல நாள் பார்த்து
பழகி மட்டும் வர்றது இல்ல, ஒரு முறை
பார்த்தாலும் ஆழ் மனசுல புதைஞ்சு இருக்கிற உன்னதமான உணர்வு என்று ஐ ஃபீல் தட்
அண்ட் டிக்லார் டூ.. ஐ லவ் யூ.." என்று கூறினான் கண்களில் காதல் மின்ன, அவன் மின்மினி தாமினி மீதான
காதலை.
ஜார்ஜின் குறும்பு பார்வைக்கும், தாமினியின் நாண பார்வைக்கும் நடுவே உண்டு முடித்தார்கள்.
"எல்லாம் ஓகே தான். மூணு புள்ளை பெத்ததுக்கு அப்புறமும் இந்த ஹனிமூன்
டிரிப் கொஞ்சம் ஓவரா இல்ல?"
என்று கேட்ட மனைவி கையை பிடித்து சுற்றி பின்னிருந்து அவளை கட்டி
கொண்டவன், "மூணு
இல்ல, இன்னும்
முப்பது வருசம் கழிச்சு கூட ஹனிமூன் கூட்டி வருவேன். என் பொண்டாட்டி எவன்
கேட்பான். அறுபது வயசில சாமியாரா தான் இருக்கணும்னு யாரும் சொல்லல, அந்த வயசுலயும் பொண்டாட்டி
மேல தீர காதலோடு சல்சா பண்ற தம்பதிகள் தான் ஆத்மார்த்த தம்பதிகளா இருப்பாங்க"
என்று சொன்னபடி அவள் கழுத்து வளைவில் உதடுகளால் குறு குறுப்பு செய்ய, கூச்சம் கொண்டு நெளிந்தவளோ
விலகி ஓட முயல அவள் முயற்சி எல்லாம் வீண் ஆனது அவன் கைவளைவில்.
"காதலின் தேடல் முடியாத போது மோகம் மட்டும் எப்படி முடிவுக்கு வரும்
" என்று அவள் காதில் உரைத்தவன் கிசு கிசுப்பு குரலும், காது மடலை உரசி சென்ற அவன்
மூச்சு காற்றும் சொல்லாத பல காதல் லீலைகளுக்கு வழி வகுக்க, கிறக்கம் கொண்டாள்
பெண்ணவள்.
அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டவள் அவஸ்தையை ரசித்தவன் அவள் டி
ஷர்ட் விலகி போன வெற்று இடையில் விரல்களால் ஊர்வலம் நடத்த, மோகம் கொண்டு விழி மூடியவள்
அவன் மொத்தமாக ஆட்கொண்டாள் கூட இந்த அவஸ்தை இல்லை என்றே எண்ணினாள்.
அவள் மாய கண்ணன் விரல்களோ அவள் மேனியில் எல்லை மீற துடிக்க, மேலும் மேலும் அவஸ்தை
உணர்ந்தவள் வெட்கம் துறந்து அவன் கீழ் அதரங்களை கவ்வி சுவைக்க, மோகத்தில் கொடுக்கும்
முத்தம் அதன் எல்லையோடு நிற்பதில்லையே! தன் திட்டம் நிறைவேறிய வெற்றி களிப்பில்
அவள் கள்வன் அவளை கைகளில் ஏந்தி தாங்கள் வந்த பணியை சிறப்பாக செய்ய புறப்பட்டு
இருந்தான்.
அதுக்கு மேல கணவன் மனைவி ரூம் எட்டி பார்க்க கூடாது.. இத்தோட கேமரா
ஆஃப் பண்ணிட்டு கடையை சாத்திட்டு கிளம்பிருவோம்....
***** சுபம் *****
ஒருவழியா கதைக்கு சுபம் போட்டு முடிச்சாச்சு. இல்லனா இந்த மினி
பொண்ணு மூளையை ஆக்குபை பண்ணி அவளை தவிர வேற யாரையும் யோசிக்க விட மாட்ட.
கதை படிச்சவங்க எல்லாம் எப்படி இருந்தது என்று கருத்து சொல்லிட்டு
போங்க, கழுவி
ஊத்துறதா இருந்தாலும் ஊத்திட்டு போங்க...
அப்புறம் இந்த கதைல உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம்
என்ன?
பிடிக்காத கதாபாத்திரம் ஏதாவது இருந்தா அதையும் சொல்லுங்க?
இந்த கதைய பத்தி யோசிச்சதும் நினைவு வர சீன் இல்ல டயலாக் சொல்லுங்க?
எனக்கு "யாராவது கொஞ்சம் கயிறு கடன் கொடுங்க... இங்கேயே தூக்கு
போட்டு தொங்கிடுறேன்" மினி டயலாக் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
உங்களுக்கு???
இந்த சீன்லாம் அவாய்ட் பண்ணியிருக்களாம் ? அப்படினா எதை சொல்லுவீங்க..
அப்புறம் கதை பத்தின ஓவர் ஆல் உங்க கருத்து எல்லாம் சொல்லிட்டு
போங்க..
நைட்டு 12, 2 மணி
வரைக்கும் முழிச்சு இருந்து கதை எழுதி இருக்கேன். ஏதாவது பார்த்து போட்டு விட்டு
போங்க..... (டெம்போ லாம் வச்சு கடத்தி இருக்கோம் மாடுலேசன்)
Comments
Post a Comment