விலை : 26





 விலை : 26


துடிக்கும் ஆசை பிறக்கும் போது
வெளிச்ச மேகம் தறிக்க தோன்றும்
சில நொடி இமை இமைக்கும் போது
சிறக்குடன் நான் பறக்கிறேன்!!

உனது வாசல் கடந்து போக
உலக வேகம் குறைந்திடும்!
உனது பார்வை உதிரும் போது
இதயம் கரைந்திடுமே!
உனது பாதையில் எனது காலடி
உலகம் வழிவிடுமா!!!

ஏதேதோ என்னை செய்தாய்!!!
என்னடா என்னை செய்தாய்!!!



அவள் கூறிய அனைத்தும் அவளை பற்றி தெரிந்து கொள்ள, அவள் அறியாமல் விசாரித்த முதல் நாளே அறிந்தது தான். அவள் அறியா உண்மை ஒன்றையும் அவன் அறிந்து வைத்திருந்தான். அதற்கு தான் இன்று ஸ்ரீக்கு இந்த நிலை. அவனை ஒவ்வொரு நாளும் அணு அணுவாய் துடிக்க வைத்து அவன் வாழும் வாழ்க்கையையே நரகமாக்க திட்டமிட்டு அதை செயல்படுத்தியும் இருந்தான்.


இன்று அவளிடம் அவன் ஸ்ரீயைப் பற்றி கேட்டதற்கு காரணம் கூட அவள் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து கொண்டால் அவள் பாரம் குறையும் என்ற எண்ணத்தில் தான். அவன் எண்ணம் சரியே! அவள் மனம் லேசானது. யாரிடமும் கூறாத தன் மன பாரத்தையும் வலியையும் அவன் மடியில் இறக்கி வைத்த உணர்வு அவளுக்கு.


இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்த படியே மௌனமாய் இருக்க, அப்போது ஜார்ஜின் போன் அடித்தது. அவனும் பேசுவதற்காக எழுந்து சென்றான். ஆயிரம் கேள்விகள் அவனிடம் கேட்க இருந்தாலும் எதுவும் கேட்க தனக்கு உரிமை இல்லை என்று நினைத்து அமைதியாக இருந்தவள் காதல் மனமோ, "ஏய் லூசு அவன்கிட்ட உன்ன கல்யாணம் பண்ண சொல்லி கேட்டு இருக்கலாம் தானே! ஏன் கேட்கல? நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்ட லூசு லூசு" என திட்ட, விதண்டா வாதம் செய்யும் இன்னொரு மனமோ "அவ எப்படி கேட்பா, அவனோட முதல் சந்திப்புல இருந்தே இவ மேல அவனுக்கு என்ன மாதிரியான அபிப்பிராயம் இருக்கும் சொல்லு. முதல்ல ரோட்டுல வண்டிய இடிச்சதுக்கு காசு கேட்டு சண்டை போட்டா, அடுத்து பணத்துக்காக குழந்தை பெத்து கொடுக்க ஒத்துகிட்டா, அதுவும் இயற்கையான முறையில, பணத்துக்காக கிஸ் பண்ணது, கேம் ஷோல கலந்து கூத்தடிச்சது, எல்லாத்துக்கும் மேல நேத்து நைட் பின்னி பிணைந்து உறவு கொண்டாடுனது. இதையெல்லாம் வச்சு பார்க்கும் போது அவன் இவளை என்னனு நினைச்சு இருப்பான். பணத்துக்காக எதையும் செய்ற மட்டமான பொண்ணுன்னு தான் கண்டிப்பா அவன் எண்ணம் இருக்கும். உன்னை பத்தி நல்ல விதமா நினைக்க உன்கிட்ட என்ன இருக்கு? ஒரே ஒரு விஷயம் சொல்லு?" என்று எள்ளி நகையாடி அவளை வதைத்தது.


தன் மனம் கேட்கும் கேள்விகளுக்கு அவளிடம் எந்த பதிலும் இல்லையே! ஊமையாக கண்ணீர் வடிக்க மட்டும் தான் முடிந்தது அவளால். தன்னை தானே சுய விமர்சனம் செய்து வெட்கி கொண்டவள் ஒன்றை மறந்து போனாள். தன் நடத்தையை இழிவு படுத்தி தான் சித்தரிக்கும் அத்தனை உருவிலும் அவன் நடத்தையும் கேள்வி குறியாகுமே! கலியுக ராமனாக வாழும் அவனுக்கு இவள் சிந்தனை ஓட்டம் தெரிய வந்தாள்? சீதா தேவி அக்னி பிரவேசம் நிகழ்த்தியது போல் இவனும் கோபம் என்னும் அனல் கொண்டு அக்னி பிரவேசம் நிகழ்த்தினால் அதில் மாண்டு போவது அவளாக தான் இருப்பாள்.


நல்லவன் யார்? தீயவன் யார்? என்று தெரியாமல் பலியாகும் பெண்ணினம், தீயவனின் முக திரையை நம்பி எளிதில் ஏமாந்து விடுகிறது. அதில் ஏற்பட்ட வலியும் அனுபவமும் நல்லவன் சதையை குத்தி கிழிப்பது தான் உலக வழக்கமாக இருக்கிறது. பெண்கள் என்ன தான் செய்வார்கள். என்ன என்னவோ கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பவர்கள் இதற்கும் ஒரு தீர்வு கண்டு பிடித்தாள் நலமாக இருக்கும். பார்த்த உடனே உண்மையானவன் யார்? வேசமிடுபவன் யார்? என்று தெரிந்தால் குறைந்த பட்சம் நம்பிக்கை வளர்த்து ஏமாறும் கூட்டமாவது சூதானமாக இருப்பார்கள்.


போன் பேசி விட்டு வந்தவன் தாமினியின் குழம்பிய முகத்தை கண்டு "என்னாச்சு ஹனி? எனி பிராப்ளம் என்ன திங்க் பண்ற?" என்று வினவ, அவளோ வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்னகையுடன் "ஒன்னுமில்லை" என்றாள்.


அவளை சந்தேகமாக பார்த்தவன்,  "சரி கிளம்பு" என்று கூற, "எங்க?" என்று தான் கேட்டாள். "உன் மைண்ட்டும் உடம்பும் ஃப்ரெஷ் ஆக்குகிற இடத்துக்கு" என்று சொல்லி அவளை அழைத்து சென்றான்.


அங்கு இருந்த மசாஜ் சென்டருக்கு அவளை அழைத்து சென்றவன், "தாய்லாந்து வந்துட்டு மசாஜ் பண்ணிக்கலைனா எப்படி?" என்று கூற, "இல்லை ஜார்ஜ் இதெல்லாம் வேண்டாம்" என்று ஆரம்பத்தில் மறுத்தவளிடம், "உனக்கு கண்டிப்பா இது தேவைபடும். நேத்து நைட்டு ரொம்ப டயட் ஆகிட்ட, இன்னைக்கும் கண்டினுயு ஆகும்" என்று அவள் காதில் கிசு கிசுக்க, பொது இடத்தில் அவன் வரம்பு மீறிய பேச்சும், விஷம பார்வையும் இவள் உடலில் சூடான ரத்தத்தை பாய்ச்சி செவ்வென சிவக்க வைத்தது அவள் கன்னங்களை.


'பொது இடத்தில் என்ன பேச்சு இது?' என்று அவன் காதை திருக தோன்றினாலும் அவனை முறைக்க எண்ணி தோற்று போனவள் நாணமே வென்று தலை குனிந்து கொண்டாள். அவள் நிலையை புரிந்துக் கொண்டவனும் இதழ்களுக்குள் அடக்க பட்ட சிரிப்புடன் வெட்கத்தில் சிவந்த அவள் முகத்தை ரசித்தவாறு மேலும் அவளை சீண்டிட எண்ணி அவளை நெருங்கிய சமயம், "மிஸ்ஸிஸ் ஜார்ஜ்" என்று ஸ்பாவின் வரவேற்பாளினி அழைக்க, ஜார்ஜும் தன் சில்மிஷங்களை ஓரம் கட்டி அவளை உள்ளே அனுப்பி வைத்து விட்டு வெளியே காத்திருந்தான்.


எல்லா இடங்களிலும் அவளை தனது மனைவி என்று பதிவு செய்கிறான் தானே. அதில் இருந்தே அவள் புரிந்து கொண்டு இருப்பாள் என்று அவன் நினைத்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையில் காதல் காமம் என அவன் வாழ நினைக்க, அவள் என்னமோ இவன் எண்ணத்திற்கு மாறாக அல்லவா இருக்கிறது. அவள் தான் தன் மனைவி என்று அவன் எல்லா இடங்களிலும் நிலை நாட்டுகிறான். கண்ணை மூடிக் கொண்ட பூனை போல் அவள் சிந்தையில் எல்லாவற்றிற்கும் தவறான கருத்தை ஏற்றி அதற்கு அவளுக்கு மட்டுமே நியாமான விளக்கம் ஒன்றையும் கொடுத்து கொண்டாள் அவன் என்ன தான் செய்வான்.


அவளிடம் மனம் விட்டு பேச அவன் தயார் தான். அவள் அல்லவா எதையும் கேட்கும் நிலையில் இல்லை. தனக்குள் மறுகி மறுகியே தன்னோடு அவன் நிம்மதியையும் குழைக்கும் வழிகளை வகுத்து கொண்டிருக்கிறாள். இதெல்லாம் எங்கு போய் முடியுமோ? அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.


இப்போது கூட மசாஜ் மூலம் அவள் மனமும் உடலும் பழையதை மறந்து புத்துணர்வுடன் புது வாழ்க்கைக்கு தயாராகும் என்று நினைத்து தான் இங்கே அழைத்து வந்திருக்கிறான்.


ஒரு மணி நேரம் கழித்து அவள் வெளியே வந்த போது ஜார்ஜ் நெல்சன் எமிலியோடு கதைத்து கொண்டிருந்தான். நெல்சனும் ஜார்ஜும் கை குலுக்கி கொள்ள, எமிலி முகத்திலோ மட்டற்ற மகிழ்ச்சி. என்ன விடயம் என்ற யோசனையில் தாமினி அவர்களை நெருங்க, எமிலியோ "ஹாய் மினி, ஃபைன்னலி நீயும் வந்துட்ட, வீ ஆர் கோயிங் டூ ஏ பிசினஸ் பார்ட்னர்ஸ். ஐ அம் சோ ஹேப்பி" என்று அவளை கட்டிக் கொள்ள, தாமினிக்கு எதுவும் புரியவில்லை. அவள் வார்த்தைகள் புரிந்தது. ஆனால் இவள் என்ன கூறுகிறாள், 'பிசினஸ் பார்ட்னர் ஆஹ்... அப்படியெனில் ஜார்ஜ் வியாபார நோக்கோடு தான் இங்கு வந்திருக்கிறானாஹனிமூன் டிரிப் என்று சொன்னதெல்லாம் பொய்யா?' என்று மனதில் அவன் மீது அதிக எதிர்ப்பார்ப்பு கொண்டு அது ஏமாற்றத்தை தழுவிய உணர்வு அவளுக்கு. தன் உணர்வுகளை வெளிகாட்டது  சபை நாகரீக புன்னகையோடு அவள் ஜார்ஜை பார்க்க, அவனோ இயல்பான புன்னகையோடு நெல்சனை அணைத்து விடை பெற்று தாமினியோடு அறைக்கு செல்ல எத்தனித்தான்.


அறைக்கு செல்லும் வழியில் தாமினி தன் மனதில் தோன்றிய இந்த வியாபார எண்ணத்தை அவனிடம் கேட்டாள்.


"இது உன்னோட பிசினஸ் டிரிப் ஆஹ்... நம்மளோட ஹனிமூன் டிரிப் இல்லையா?" என்று ஏமாற்றத்தில் பாவமாக கேட்க,


அவள் முகத்தை அழுத்தமாக பார்த்தவன், "உனக்கு அப்படி தோணுதா?" என்று அவளிடமே எதிர் கேள்வி கேட்டான். அதற்கு அவள் பதில் சொல்லாது ஒரு வித தவிப்புடன் அவன் முகத்தை பார்க்க, அவள் வாடிய முகத்தை பார்த்தவன், "200 % இது ஹனிமூன் டிரிப் தான். நெல்சன் இங்க வந்த அப்புறம் தான் எனக்கு தெரியும். அவனோட பேசும் போது எங்களோட தாட்ஸ் ஒரே மாதிரி இருக்கிறதா தோணுச்சு. ஹி இஸ் ஏ குட் ப்ரெண்ட் டூ மீ. அவனுக்கு இந்தியால பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு ஆசை. என்கிட்ட ஹெல்ப் கேட்டான். நானும் ஆஸ்திரேலியால அவன் மூலம் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைச்சு ரெண்டு பேரும் அக்ரிமெண்டு போட்டுகிட்டோம்" என்று உண்மையை கூற, அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். அவர்களின் முதல் நாள் சந்திப்பு பரிச்சயமானவர்கள் போல் இல்லையே! என்று மனதில் இங்கு வந்த முதல் நாளை ஓட்டி பார்த்து உறுதி செய்து கொண்டாள்.  அதன் பிறகே சற்று முன் தோன்றிய ஏமாற்ற உணர்வு நீங்கி மசாஜ் செய்த பலனை அனுபவிக்க முடிந்தது.


இதிலிருந்தே அவளுக்கு தெரிந்திருக்க வேண்டும். கேள்விகள் கேட்டாள் தான் குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி பிறக்கும் என்று. ஆனால் எங்கே தேவையற்றதை கேட்டு இருக்கும் சந்தோசத்தை இழந்து விடுவோமோ? என்று அஞ்சி எதையும் கேட்கும் தைரியம் அவளுக்கு வரவில்லை.


"சரி நீ சொல்லு, மசாஜ் ஹெல்ப் ஃபுல் ஆஹ் இருந்ததா?" என்று அவன் கேட்க,


"ஹ்ம்ம்.... ஆரம்பத்துல எதுக்கு டா இங்க கூட்டி வந்தான்னு உன் மேல கொலைவெறியே வந்துச்சு. உடம்பெல்லாம் பார்ட் பார்ட் ஆஹ் வலிக்க ஆரம்பிச்சது. ஆனா முடிஞ்ச அப்புறம் நிஜமா ரொம்ப ரிலக்ஸ் ஆஹ் உணருறேன்.. தங்க் யூ சோ.... மச்" என்று அவள் இதழ் குவித்து சொல்ல, அவன் திட்டம் வெற்றி பெற்று விட்டது. அவள் மனம் இப்போது முழுவதும் தெளிவாகி விட்டது என்று சந்தோசபட்டவன், அவள் சொன்ன 'தங்க் யூ சோ... மச்' சில் சோ... வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து இழுத்து உச்சரிக்கும் போது குவிந்த அவள் இதழ்களில் தன்னை தொலைத்தவன் "உன்னோட தாங்க்ஸ் எல்லாம் ரூம்க்கு வந்து சொல்லு" என்று குறும்பு குரலில் கூறி அவள் இடையை அணைத்த படி அழைத்து சென்றான்.


அன்றைய நாள் இதமாக நகர, இரவு எப்போதும் போல் ஜார்ஜ் தன் லேப்டாப்புடன் ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டு கீழ் தளத்தில் அமர்ந்து தன் அலுவலக நிலவரத்தை பார்வையிடலானான்.


தாமினி மாடியில் பால்கனி வழியே இயற்கை காற்றை நுரையீரலுக்கு அனுப்பி கொண்டே, விழி வழியே இருள் சூழ்ந்த கடலை ரசித்து கொண்டிருந்தாள். அந்த அமைதியான சூழல் அவள் மனதையும் அமைதி கொள்ள செய்து, வீண் சந்தேகங்களையும் தர்க்கங்களையும் ஓரம் கட்டியது.


அப்போது "ஸ்ஸ்ஸ்... டப்.... டப்" என்ற சத்தத்துடன் வானில் பிரகாசமாய் பல வண்ணங்களை ஏற்படுத்திய வான வெடி வெடிக்க, செயற்கையான நட்சத்திரங்களாய் மிளிர்ந்த தீப்பொறிகள் அவள் முகத்தில் புன்னகையை வர வழைத்தது. பட்டிக்காட்டான் வானில் புள்ளியாய் பறக்கும் விமானத்தை அன்னார்ந்து பார்ப்பது போல் முகம் கொள்ள புன்னகையுடன் ஆ'வென அதை பார்த்து கொண்டு இருந்தவளுக்கு தன்னவனுடன் இதை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏழ, அவனையும் இதை பார்க்க வைக்க வேண்டும் என்ற பரவசத்தில் அவனை அழைக்க கீழே ஓடி வந்தாள்.


"ஜார்ஜ் சீக்கிரம் வா... வான வெடி வெடிக்கிறாங்க ரொம்ப நல்லா இருக்கு. நீயும் வந்து பாரு" என்று அவன் கையில் இருந்த மடிக்கணினியை மேஜை மீது பிடுங்கி வைத்து விட்டு அவனை அழைக்க, அவனோ 'இதெல்லாம் ஒரு விசயமா?' என்னும் ரீதியில் "நீ போய் பாரு, எனக்கு வேலை இருக்கு" என்று சொல்லி மடிக்கணினியை எடுக்க, மறுபடியும் அவனிடம் இருந்து அதை பறித்து மேஜை மீது வைத்தவள் "வேலை அப்புறமா பாரு, இப்போ வந்து அதை பாரு" என்று அவன் கை பிடித்து இழுத்தாள்.


'சாதாரண வான வெடி தானே! இதற்கு எதற்கு இத்தனை அலம்பல். சிறு பிள்ளை தனமாக அதை நீயும் பார்க்க வேண்டும் என்று அடம் வேறு பிடிக்கிறாள்' என்று தான் தோன்றியது அவனுக்கு. முதலில் மென்மையாக மறுத்தவன் வார்த்தைகள் இப்போது காட்டமாக வெளிவந்தது.


"ஏய்... கிராக்கார்ஸ் தன, அதுக்கு எதுக்கு இவ்வளவு பிடிவாதம் பண்ணுற, நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்லை. சொன்ன புரிஞ்சுக்கோ. நான் முக்கியமான மெயில் செக் பண்ணி அதுக்கு உடனே ரிப்ளை பண்ணனும். இங்க இருந்து போ..." என்று கத்த, இந்த ஜார்ஜ் அவளுக்கு முற்றிலும் புதிதாக இருந்தான்.


மற்றவர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்டாலும் அவளிடம் மென்மையாக தானே இது நாள் வரை நடந்து கொண்டான். அவனின் இந்த கர்ஜிக்கும் குரலில் சற்று நடுங்கி தான் போனாள். தன்னவனின் இந்த கோபத்தால் விழிகளில் துளிர்த்த நீரை கஷ்டபட்டு வெளியேறாமல் தடுத்தவள் அவனை முறைத்து கொண்டே வேகமாக படியேறி படுக்கை அறைக்கு சென்று கட்டிலில் குப்புற விழுந்தாள்.


அப்போதும் அவளுக்குள் ஒரு எதிர் பார்ப்பு, தன்னிடம் கோப பட்டதை தவறு என்று உணர்ந்து அவன் பின்னாலே வந்து சமாதானம் செய்வான் என்று. எங்கே வந்தான், அவன் தான் வேலை என்று வந்து விட்டாள் அனைத்தையும் மறந்து அதில் மட்டுமே கவனம் செலுத்துபவன் ஆயிற்றே. இவள் கோபமும் கலங்கிய விழிகளும் அவன் சிந்தையில் பதியவே இல்லை. அவன் தன் வேலையை தொடர்ந்து கொண்டு தான் இருந்தான்.


இங்கே இவள் தான் தலையணையை நனைத்த கண்ணீரை துடைத்து கொண்டு "இன்னும் ஏன் அவன் வரல" என்று எண்ணியவாறு மெதுவாக எழுந்து வந்து கீழே உற்று பார்க்க, அவனோ சற்று முன் எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பது போல் கடமையே கண்ணாக அமர்ந்து இருந்தான். அவள் மீது கொண்ட காதலும் அக்கறையும் அவள் பின்னால் செல் என்று கூறினாலும், அவளை பிறகு சமாதானம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.


"சரியான வொர்கொலிக், பிசினஸ் பேய், ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள்..." என்று திட்டி விட்டு உள்ளே சென்று விட்டாள்.


"மினி இப்போ புரியுதா? அவன் ஏன் கல்யாணம் பண்ணிக்கலைனு, இப்படி லேப்டாப்குள்ள மண்டைய விட்டுட்டு இருந்தா? எந்த பொண்ண தான் நிமிர்ந்து பார்த்து இருப்பான். இந்த லட்சணத்தில் அவன் லைஃப்ல வேற ஏதும் பொண்ணு இருந்தா என்னால தாங்கிக்க முடியாது, அய்யய்யோ அம்மம்மானு புலம்பல் வேற, காட்டுக்குள்ள வாழுற ஜார்ஜ் மாதிரி இவன் கார்ப்பரேட் காட்டுக்குள்ள வாழுற ஜார்ஜ். ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள்..." என்று அவனை வசைபாடிய படியே அவனுக்கு அடுத்த பட்ட பெயர் ஒன்றையும் வைத்தாள்.


"இவனை நம்புனா வேலைக்கு ஆகாது. நாம மட்டுமே போய் பார்க்கலாம்" என்று தேற்றிக் கொண்டு அவள் பால்கனி வருவதற்குள் அனைத்தும் முடிந்து அதிக வான வெடிகள் வெடித்ததற்கான சாட்சியாக வானில் புகை மண்டலம் மட்டுமே பரவி இருந்தது.


"அய்யய்யோ முடிஞ்சு போச்சே?" என்று கன்னத்தில் கை வைத்து அங்கு இருந்த இருக்கையில் சோகமாக அமர்ந்து கொண்டாள்.


தன் வேலைகளை முடித்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து அவன் வர, தாமினியோ 'ஆடி அசைஞ்சு வரத பாரு. அவன் கூட பேசாத மினி' என்று அவனை பார்த்து வெடுக்கென்று கழுத்தை திருப்பி கொண்டு பால்கனி கம்பியை பிடித்து வெளியே வெறித்து பார்ப்பது போல் காட்டிக் கொண்டாள்.


அவள் செய்கையில் உண்டான புன்னகையை கீழ் உதட்டில் அடக்கி கொண்டவன் அவளை பின்னிருந்து அணைத்து கொள்ள, அவளோ வெடுக்கென்று தன் வயிற்றை சுற்றி இருந்த அவன் கரங்களை பிரித்து அவனை விட்டு விலகி நின்றாள். "ஹனி ஏன் இப்படி நடந்துகிற? என்மேல கோபமா?" என்று கேட்க, 'ஓ.. நான் கோபமா இருக்கிறதே இப்போ தான் இவனுக்கு விளங்குதா?' என்று நினைத்து கொண்டவள் அவன் கேள்விக்கு பதில் அளிக்காது அவனை முறைத்து பார்த்து விட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.


"இப்போ நான் என்ன பண்ணினா உன் கோபம் குறையும் சொல்லு?" அவள் பாராமுகம் அவனுக்கும் வலியை கொடுத்தது. பால்கனி கம்பி மீது அவள் வைத்திருந்த அவள் கரம் மீது தன் கரத்தை வைக்க, அதையும் சட்டென்று உருவி கொண்டாள். 'பார்ரா' என்று நக்கலாக நினைத்து கொண்டவன், விஷம புன்னகையோடு அவளையே பார்த்து கொண்டிருந்தான்.


அவன் தன்னை தான் விழுங்கி விடும் பார்வை பார்க்கிறான் என்பதை உணர்ந்தாலும், 'என்னை திட்டுனதும் இல்லாம சமாதானம் கூட செய்ய வரல. போட.. உன் பேச்சு கா' என்று சிறு பிள்ளை தனமாக கோபம் கொண்டு முறுக்கி கொண்டிருந்தாள் அவனின் மணாளனி.


அப்போது வானில் மீண்டும் வான வெடி வெடிக்க, தலை நிமிர்ந்து ஆகாயத்தை பார்த்தவள் அப்படியே தலையை திருப்பி ஜார்ஜை பார்த்து, "இது உன்னோட வேலையா?" என்று தான் கேட்டாள். அவனோ ஆம் என்று கண்களை மட்டும் மூடி திறந்து பதில் அளித்தான். அவளுக்காக ரிசார்ட்டில் பேசி மறுபடியும் ஏற்பாடு செய்ய சொல்லி அதற்கான பணமும் கொடுத்து இருந்தான்.


"இதை பார்க்க முடியலனு தானே இந்த கோபம். இப்போ சந்தோஷமா?" என்று கேட்க, இல்லை என்று விரக்தியாக தலையாட்டினாள். பெண் மனதை முழுவதுமாக புரிந்து கொண்ட ஆண் உலகிலேயே கிடையாதே.


அவள் இல்லை என்றதும் 'வேறு என்ன?' என்று அவன் அவளை யோசனையாக விழிகள் சுருக்கி பார்க்க, "அப்போ இருந்த சந்தோசமும் பரவசமும் இப்போ இல்ல ஜார்ஜ். எல்லாத்தையும் காசு கொடுத்து வாங்க முடியாது" என்றாள் சோர்வான குரலில்.


"ஒத்துக்கிறேன், எல்லாத்தையும் காசு கொடுத்து வாங்க முடியாது தான். ஆனா எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. சின்ன குழந்தைகளோடு சந்தோசம் சாக்லேட் பலூன்ஸ் இதையெல்லாம் தாண்டி நாமளும் குழந்தையா மாறி அவங்களோட விளையாடுறது தான் அவங்களுக்கு உண்மையான சந்தோசத்தை கொடுக்கும். அது போல உன்னோட சந்தோசத்தையும் என்னால திருப்பி கொண்டு வர முடியும்" என்று கூறியவாறே அவள் இடையை கிள்ள, "ஏய்.." என்று அவன் கையை தட்டி விட்டவள் அறைக்குள் ஓடினாள்.


அவனும் அவளை பின்தொடர்ந்து இரண்டே எட்டில் நடந்தே அவளை பிடித்து மறுபடியும் அவள் இடையில் கிள்ளி கிச்சு கிச்சு மூட்ட, கூச்சத்தில் நெளிந்தவள் சிரித்து கொண்டே மறுபடியும் அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளி விட்டு அந்த அறையுள் ஓடி தன்னை நெருங்க வருபவன் மீது தலையணையை தூக்கி எறிய, அவனோ தன் முகத்திற்கு நேர் வந்த அந்த பஞ்சு பொதியை ஒற்றை கையால் பிடித்து கட்டிலில் போட்டவன் மெத்தையில் ஒற்றை காலை மடக்கி ஏறி கட்டிலுக்கு மறுபுறம் நின்றவள் கையை இளகுவாக பிடித்து இழுக்க, அவளும் அவன் இழுவிசையில் நிலையில்லாமல் அவன் மீது மோத, இருவரும் மெத்தையில் சரிந்து விழுந்தனர்.


அவன் ஒரு கை அவள் தலையை தாங்கி இருக்க, அவன் மொத்த உடலும் அவள் மேனியை உரசி அவளை முழுவதுமாக சிறை செய்து இருந்தது. அவன் மீதான கோபம் போன இடம் தெரியாமல் இருக்க, 'இப்போது இல்லை' என்று கூறிய சந்தோசம் அவள் முகத்தில் பரவி கிடந்தது. மினி என்றொரு மானஸ்தியை நீங்கள் தேடினாலும் இங்கே பார்க்க முடியாது.


அன்று அவள் கற்று கொடுத்த கிச்சு கிச்சு வைத்தியம் இன்று ஜார்ஜ்க்கு கைகொடுத்தது. இதழ்கள் புன்னகையில் விரிந்து இருக்க, கன்னங்கள் இரண்டும் அவன் அருகாமையில் சிவந்து இருக்க, விழிகள் மட்டும் அவனிடம் மாட்டி கொள்ள விரும்பாமல் மூடி கொள்ள, "ஹனி.... ஓபன் யுவர் ஐஸ்" என்று கிறக்கமாக கூறியவன் குரலும் காது மடலை வெட்கத்தில் சிவக்க வைத்தது.


மெதுவாக தன் அல்லி விழிகளை திறந்தவள் அவன் காந்த விழிகளை எதிர் கொள்ள முடியாமல் விழி தாழ்த்தி கொள்ள முயல, அவள் தாடையை பிடித்து நிமிர்த்தியவன் அவள் செவ்விதழ் தேனை சுவைக்க அதரங்களை நெருங்க, அவளும் அவனுக்கு இசைந்து தன் விழி மூடி அவன் முத்தத்தை உணர காத்திருந்தாள்.


நூலளவு இடைவெளியில் அவன் தன் தலையை பின்னிழுத்து கொள்ள, அவன் இதழ் முத்தத்திற்காக காத்திருந்தவள் ஏமாற்றத்துடன் விழி திறந்தாள். அவனோ விஷம புன்னகையோடு "யாரோ கொஞ்ச நேரம் முன்னாடி என் மேல கோபமா இருக்கிறதா சொன்னாங்க ல்ல" என்று நக்கலாக கேட்க, இப்போது அவளுக்கு நிஜமாகவே கோபம் வந்தது. தன் உணர்வுகளை தூண்டி விட்டு இப்படி நக்கலாக கேட்பவனை வெட்டவா குத்தவா என்று அவள் பார்த்து கொண்டே "ஆமா கோபமா தான் இருக்கேன். அதுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா?" என்று சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவள் அவன் டி- ஷர்ட்டை பிடித்து தன்னை நோக்கி இழுத்து அவன் கீழ் அதரங்களில் தன் பற்கள் தடம் பதிய கவ்வி கொண்டாள்.


அவள் தண்டனையை புன்னகையுடன் ஏற்று கொண்டவன் அவள் செயல்களுக்கு சேவகனாகி போனான். வெளியே அவன் ஏற்பாடு செய்திருந்த வான வெடி இடைவெளி விடாது வெடித்து விண்ணில் ஒளி வீசி சிதற, அதை அவனுடன் காண ஆசை கொண்டவளோ அவன் காதலில் கரைந்து கொண்டு இருந்தாள்.


இன்று ஒரு விஷயத்தை தாமினி தெளிவாக புரிந்து கொண்டாள் ஐந்து நிமிடம் கூட அவனிடம் தன் கோபம் நிலைக்காது என்று. அவன் நிலைக்கவும் விட மாட்டான் என்றும்...


Comments

Popular posts from this blog

உன் காதலின் விலை என்ன ? - 1

விலை : 3

Extra bonus..