விலை : 28

 


விலை : 28

தூது அனுப்பிடவே
நேரம் எனக்கிலையே...
நினைத்த பொழுதினிலே
வரணும் எதிரினிலே...


ஜார்ஜ் பிரகாஷ் மூலம் தொடங்க பட்ட அனைத்து வேலைகளையும் அடியோடு அழித்து விட்டு புதிதாக ஆரம்பித்திருந்தான். மீண்டும் முதலில் இருந்து வேலையை தொடங்கி கொடுக்க பட்ட நாளுக்குள் முடிப்பது என்பது மலையை பிளப்பது போல் கடினமான வேலை என்று அறிந்தாலும் அவர் மூலம் சிறு துரும்பும் தனக்கு தேவையில்லை என்று எப்போதோ முடிவு செய்து அவர்களை ஒதுக்கி வைத்தவன் ஆயிற்றே. இப்போது வந்து ஒட்டிக் கொண்டாள் அதை ஏற்பானா என்ன?


ஜார்ஜின் இந்த முடிவை அறிந்துக் கொண்ட பிரகாஷ் மனதளவில் மிகவும் சோர்ந்து போனார். தன் உழைப்பு வீணாவதை எண்ணி அவர் துளியும் வருந்தவில்லை. தான் பாசம் கொட்டி வளர்த்த மகன் இன்று தன்னையே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு அவனை ஆளாக்கிய தன் மீது தான் அவருக்கு கோபம் வந்தது. ஆனால் அதற்காக, தனக்கும் தன் மகனுக்கு இந்த பிரிவை ஏற்படுத்திய ஷோபியாவிடம் கடுமையாக நடக்கும் அளவிற்கு அவர் ஒன்றும் கொடூரமானவரும் கிடையாது. அவருக்கு தன் உதிரத்தில் பிறந்த மகனா? இல்லை ஆருயிர் மனைவியா? இருவரில் யார் வேண்டும் என்று கேட்டாள். அவர் மனைவி பக்கமே நிற்பார். எந்த சூழலிலும் தன்னை நம்பி வந்த பெண்ணை கைவிடுவது சிறந்த ஆண்மகனுக்கு அழகு கிடையாதே. ஆனால் அதற்காக அவர் இழந்தது தன் உயிரிலும் மேலாக பேணி வளர்த்த மகனை அல்லவா! பதின் வயதிலேயே பிரிந்து வர வேண்டிய நிலைக்கு தள்ளபட்டார். அன்று பிரிந்த மகனை இன்று வரை அவரால் நெருங்க முடியவில்லை.


இங்கே ஜார்ஜ் இல்லாத சில நாழிகையே பல யுகமா கடந்தது தாமினிக்கு. சில மணி நேர பிரிவே அவள் மனதின் காதலை அவளுக்கு உணர்த்தி விட்டது. அவனை பிரிந்து செல்வது என்பது இந்த ஜென்மத்தில் முடியாத காரியம் என்பதை தெளிவாக புரிந்து கொண்டாள்.


அவள் வந்த நேரம் தாத்தாவும் ரியானும் வீட்டில் இல்லாததும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். அவர்கள் இருந்தாள் அவர்களுடனாவது நேரத்தை செலவிட்டு இருப்பாள். பயண களைப்பு இருந்தாலும் தூக்கம் வரவில்லை. அந்த அறையில் அடைந்து கிடந்தவள் அங்கு சுவரில் மாட்ட பட்டிருந்த தன்னவன் ஆளுயர படத்தின் அருகே சென்று, "இதுக்கு தான் நான் இங்க வர வேண்டாம்னு சொன்னேன். இப்போ பாரு வந்ததும் என்னை தனியா தவிக்க விட்டு ஓடி போய்ட்ட" என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.


சிறிது நேரத்தில் ஹாலில் தாத்தா மற்றும் ரியானின் குரல் கேட்க, கீழே வந்தாள்.


ஜார்ஜ் வந்த பிறகு அவர்களுக்கு அங்கு என்ன வேலை. அவன் கண் முன் நின்றால் நொடிக்கு நூறு முறை முறைத்து பார்த்தே கொன்று விடுவான் என்று ஓடி வந்து விட்டனர்.


"
ஹீரோ... ரியான்..." என்று அழைத்து கொண்டே அவர்கள் அருகில் சென்றவள், "எப்படி இருக்கீங்க ஹீரோ, நீ எப்படி இருக்க டா? உங்களை எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா?" என்று கூற,


ரியானோ, "ஏது? நீ எங்களை மிஸ் பண்ண? நாங்க இதை நம்பனும்" என்று சொன்னவன் "படி உன் போன்ல ஏதோ பிராப்ளம்னு நினைக்கிறேன். பாவம் டாம் நமக்கு கால் பண்ணி கால் பண்ணியே டயர்ட் ஆகிருப்பா" என்று சொல்ல, தாத்தாவோ "அதானே 24/7 என் போன் ஆன்லையே தான் இருந்துச்சு.  எனக்கு ஒரு காலும் வரலையே" என்று இருவரும் சேர்ந்து தாமினியை முறைக்க, அவளோ "ஹி... ஹி.." என்று அசடு வழிந்தவள் "ஆக்சுவலா என் போன்ல தான் பிராப்ளம் நினைக்கிறேன். எனக்கு அங்க சரியா சிக்னல் கிடைக்கல" என்று கூறி சமாளிக்க முயன்றாள்.


அவர்களும் 'இது மட்டமான பொய்யா இருக்கு. உன் புருஷனுக்கு மட்டும் நல்லா டவர் கிடைச்சு இங்க வந்து எங்களை வச்சு செய்றான்' என்று நினைத்து கொண்டனர். அதன் பிறகு என்ன தாமினி தான் பார்த்த இடங்களை பற்றி கதையளக்க ஆரம்பித்து அவர்கள் காதில் இருந்து இரத்தம் வராத குறையாக அறுத்து தள்ளி விட்டாள்.


மாலை வின்சென்ட் தன் மகனுடன் அலைபேசி வழி இன்று நடந்த ஜார்ஜின் திடீர் வருகை மற்றும் அவனின் அதிரடி  முடிவையும் கூறி வருந்திக் கொண்டிருந்தார். பிரகாஷூம் "சரி விடுங்க ப்பா.. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்க என்னை நினைச்சு வருத்த படாதீங்க" என்று சமாதானம் செய்து கொண்டிருந்த சமயம், ஜார்ஜ் வீட்டிற்குள் நுழைந்திருந்தான். அவர் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவன் எதுவும் பேசாமல் அவரை அழுத்தமான பார்வை ஒன்று மட்டும் பார்த்து கொண்டே மேலே செல்ல, அவனின் திடீர் வருகையால் இப்போதும் அதிர்ந்தது என்னவோ தாத்தா தான்.


அவன் அழுத்தமான பார்வையும் இறுகிய முகமும் இவரை பீதியில் ஆழ்த்த, "உன் பையன் வந்துட்டான். நான் உன்கிட்ட நாளைக்கு பேசுறேன்" என்று வாய் அருகே கை வைத்து ரசியமாக அவர் கூற, அருகில் சோபாவில் படுத்து ஹெட் செட்டில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ரியான் முகத்தில் நக்கல் புன்னகை. வின்சென்ட் போனை வைத்து விட்டு, "என்னை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா?" என்று கேட்டு அவன் தோளில் ஒரு அடி போட்டவர் "பெத்த மகன் கிட்டயே ஏதோ கள்ள காதலிகிட்ட பேசுற மாதிரி திருட்டு தனமாக பேச வேண்டி இருக்கே" என்று புலம்பிக் கொண்டார்.


மேலே அறையில் தங்களின் உடைகளை எல்லாம் பெட்டியில் இருந்து கபோடில் அடுக்கி கொண்டிருந்தாள் மினி. ஜார்ஜ் இரவு தான் வருவான் அதுவரை ஏதாவது வேலை செய்து தன் தனிமையை போக்கி கொள்ள நினைத்து அவள் உடைகளை அடுக்கி கொண்டிருக்க, அவனோ இன்று வழக்கத்திற்கு மாறாக தன் ஆசை மனைவியை பார்க்க விரைவாகவே வந்து விட்டான் அல்லவா! தாத்தாவும் கூட அதனால் தான் மாட்டிக் கொண்டார். எப்போதும் இரவு பத்து மணிக்கு வீடு வந்து சேர்பவன் இன்று மாலை ஐந்து மணிக்கே வந்தால் அவரும் பாவம் என்ன தான் செய்வார்.


அறையின் கதவை மெதுவாக திறந்து உள்ளே நுழைந்தவன், அவள் அறியாது அவள் கபோட் பக்கமாக திரும்பி நின்ற சமயம் பெட்டியில் இருந்த ஆடைகளை வெளியே கலைத்து போட்டு விட்டு அவள் திரும்பும் போது கட்டிலுக்கு பின்னால் ஒளிந்து கொண்டான்.


தாமினியோ, 'இதெல்லாம் பெட்டிக்குள்ள தானே இருந்தது. எப்படி வெளிய வந்துச்சு. யார் எடுத்து போட்டு இருப்பாங்க?' என்று கண்களை சுருக்கி தலையை சற்று பின்னிழுத்து யோசித்தபடியே கதவை பார்க்க, அதுவோ சாத்தி தான் இருந்தது.


'
யாராவது வந்தா? கூப்பிட்டுட்டு தானே வருவாங்க!' என்று தெளியாத உணர்வோடு அவள் உடைகளை மடித்து கையில் எடுத்து நிமிர்ந்த சமயம் ஜார்ஜ் அவள் முன் தோன்றி இட கரத்தால் அவள் இடையை வளைத்து பிடித்திருக்க, அவன் வல கரத்தின் விரல்களோ அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி இதழோடு இதழ் பதிக்க, அவனின் திடீர் தாக்குதலில் நடப்பது எதுவும் புரியாமல் நிலை குலைந்து போனது என்னவோ தாமினி தான்.


அவள் கைகளில் மடிக்க பட்ட உடைகள் இருக்க, அவனை விலக்கி விடவும் வழியின்றி விழி விரித்து நின்றவள் அவனின்  எதிர் பாரா வருகையாலும், தயாராக முத்தத்தாலும் திடுக்கிட்டு போனாள்.


சில நாழிகை என்றாலும் பிரிவு என்பது அவளை மட்டும் அல்ல அவனையும் தானே தாக்கியது. அது தான் அவன் எண்ணம் முழுவதும் இவளிடம் இருக்க, அலுவலகத்தில் வேலை ஓடாமல் ஓடி வந்து விட்டான்.


அவனோ தெவிட்டாத தேன் சுவையை முழுதாக பருகி முடித்த பிறகே அவளை விட்டு விலகினான்.


"
ஜார்ஜ்... நீ எப்போ வந்த? இதெல்லாம் உன் வேலையா?" என்று கலைந்து கிடந்த துணிகளை காட்டி கேட்டவள் அவன் பதிலளிக்க கூட நேரம் கொடுக்காமல், "உனக்கு டீ எடுத்துட்டு வரேன்" என்று அவனை கண்ட மகிழ்ச்சியில் அவள் தலை கால் புரியாமல் ஏதேதோ கூறிட, அவளையே வல கையை மொத்தமாக மடக்கி நாடியில் முட்டுக் கொடுத்து விழிகளில் காதல் பொங்க பார்த்துக் கொண்டிருந்தான்.

   
அவள் டீ எடுத்து வருகிறேன் என்று நகர முற்பட அவள் கையை பிடித்து தடுத்தவன் "அதான் இப்போ ஹனி டீ குடிச்சேனே அதுவே செமையா இருந்துச்சு. அது இன்னொன்னு கிடைச்சா போதும்" என்று விஷம புன்னகையில் கூறிட, எப்போதும் போல் அவன் பேச்சில் நாணம் கொண்டாலும் இப்போது அவன் காதை திருகி "அதெல்லாம் கிடைக்காது, முதல்ல நீ கலைச்சு போட்ட ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைக்க எனக்கு ஹெல்ப் பண்ணு" என்று மிரட்டினாள்.


ஆனால் அவளின் மிரட்டல்களுக்கெல்லாம் அசருபவன் கிடையாதே அவன், அவள் கையில் இருந்த துணிகளை பறித்து கட்டிலில் போட்டவன் அவளுடன் சேர்ந்து கலைந்து கிடந்த அந்த ஆடை குவியல் மேலேயே விழுந்தான். "எனக்கு இப்போ ஹனி டீ வேணும்" என்று பிடிவாதமாக கேட்க, அவளோ "ஜார்ஜ் என்னை விடு, என்ன சேட்டை இதெல்லாம்" என்று அவன் அடியில் நசுங்கியவாரே கேட்டாள்.


"
ஹனி கிட்ட மட்டும் பண்ற சேட்டை" என்றவன் அவள் இதழ்களில் இதழ் பதித்து விட்டே நிமிர்ந்தான். அவளோ "உன்ன போய் எல்லாரும் ராமன்னு சொல்றாங்களே! நீ கண்ணன் டா, திருட்டு தனமாக வெண்ணெய திருடுற கண்ணன்" என்று போலி கோபத்துடன் கூறினாள். மேலும் "என்னோட செல்ல கண்ணன் " என்று ஆசையாக அவன் கன்னத்தை கிள்ளிட, அவளின் அந்த செல்ல கண்ணன் அழைப்பு அவனுக்குள் புதுவித உணர்வு ஒன்றை தோற்றுவித்தது.


"
செல்ல கண்ணனா?" என்று அவன் கேள்வியாக கேட்க, அவளும் "ஹ்ம்ம்.. உனக்கு இந்த பெயர் பிடிக்கலையா?" என்று கேட்டாள், அவன் அப்படி அழைக்காதே என்று எதும் கூறி விடுவானோ என்ற சிறு பயத்தில்.


ஆனால் அவனோ அந்த அழைப்பில் பிரதி பிம்பங்களாய் தெரிந்த தன் பாலக வயதிற்கு அல்லவா சென்றிருந்தான்.


அந்த பெரிய மாளிகை போன்றதொரு வீட்டின் வரவேற்பு அறை சோபாவின் பின்னால் குட்டி ஜார்ஜ் மறைந்திருக்க, "கண்ணா... என் குட்டி கண்ணன் எங்க போனான்? ஹ்ம்ம்... காணுமே அவனை" என்று கையில் உணவு கின்னத்துடன் அமலா அவன் இருக்கும் இடம் தெரிந்தே அவனை காணாதது போல் கண்களை உருட்டி தேட, சோபாவின் பின்னால் குட்டி ஜார்ஜ் வாய் பொத்தி சிரித்துக் கொண்டான்.


"
அம்மா இப்போ கண்டு பிடிக்க போறேன்... கண்டு பிடிக்க போறேன்.. கண்டு பிடிச்சுட்டேன்" என்று கூறிக் கொண்டே அவரும் அவனுடன் சோபா பின்னால் தரையில் மண்டியிட்டு அவனை பிடித்து "ஒரே ஒரு வாய் கண்ணா.. என் தங்கம்ல சாப்பிடு டா" என்று கெஞ்சி கொஞ்சு உணவு ஊட்டிய தருணம் நியபாகம் வந்தது.


அதனுடன், இன்னொரு நாள் வீடு வாசல் துவக்கம் வெள்ளை நிறத்தில் குட்டி ஜார்ஜின் காலடி தடங்கள் அந்த வீட்டிற்குள் நுழைந்திருக்க, அலுவலகம் முடிந்து வந்த பிரகாஷ் அதை யோசனையாக பார்த்தபடியே உள்ளே நுழைந்தார்.


வீட்டின் கன்னி மூளையில் நவகிரக கொழு பொம்மைகள் வீற்றிருக்க, அதன் அருகே அமலா ஜார்ஜிற்கு கிருஷ்ணர் வேசமிட்டு அலங்கரித்து அவன் தலையில் மயிலிறகை சரியாக வைத்து கொண்டிருந்தார்.


பிரகாஷ், "என்ன அமலா இதெல்லாம்?" என்று சிரித்துக் கொண்டே அவரிடம் கேட்க, அவரோ "நவராத்திரி கொழு கேள்வி பட்டது இல்லையா நீங்க" என்று எதிர் கேள்வி கேட்டார்.


"
அது தெரியுது, இந்த வீட்ல...." என்று பிரகாஷ் இழுக்க, "கிறிஸ்துமஸ் ஏசு பிறப்பு குடில் வைக்கிற வீட்ல கொழு வைக்க கூடாதுனு எந்த மதத்திலும் சொல்லல பிரகாஷ்" என்று அவர் வாயை அடைத்திருந்தார்.


பிரகாஷ் அங்கு சோபாவில் அமர்ந்து இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தன் தந்தையை பார்க்க, அவரோ எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அமலா கொடுத்த சர்க்கரை பொங்கலை விழுங்கிக் கொண்டிருந்தார்.


தன் தந்தை அருகே வந்த குட்டி ஜார்ஜ் "பப்பா எனக்கு இந்த ஃபேன்ஸி ட்ரெஸ் நல்லா இருக்கா?" என்று கேட்க, அவரோ "என் பிரின்ஸ் சார்ம்க்கு என்ன போட்டாலும் நல்லா இருக்கும்" என்று அவனை தூக்கி கொஞ்ச, அவனும் தன் பால் பற்கள் தெரிய கள்ளமில்லா புன்னகையை சிந்தினான்.


"
என்னாச்சு ஜார்ஜ்?" என்று கேட்ட தாமினியின் குரல் அவன் சிந்தனையை கலைத்து நிகழ்விற்கு கொண்டு வந்தது. "ஹாங்" என்று அவன் அவளை பார்க்கஅவளோ "உனக்கு அப்படி கூப்பிடுறது பிடிக்கலையா?" என்று மறுபடியும் கேட்டாள்.


"
எனக்கு அப்படி கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும்" என்றவன் விழிகளில் ஒரு வலி அமலாவை நினைத்து.

Comments

Popular posts from this blog

உன் காதலின் விலை என்ன ? - 1

விலை : 3

Extra bonus..