விலை : 52
விலை : 52
அழகான இந்த காதல்
அன்பாலே நிஜமாச்சு!
உயிரோடு உனதாக
நம் காதல் கலந்தாச்சு கலந்தாச்சு!!
நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே
நான் வாழவே!!!!
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே
நான் வாழவே!!!!
"டாட் வீ ஆர் கோயிங் டூ லிவிங் டுகெதர்" என்று சொன்னவனை
சட்டென்று நிமிர்ந்து பார்த்த ரியான் தந்தை, எதிரில் நின்றிருந்தவர்களை பார்த்து அதிர்ச்சியாகி தான் போனார்.
மகன் "சேர்ந்து வாழ போகிறோம்" என்று கூறியதே அவருக்கு
முதல் அதிர்ச்சி என்றால் ஒரு ஆணை அழைத்து வந்து எதிரில் நிற்க வைத்தால் அவரும்
என்ன தான் செய்வார்.
சில நொடிகள் அவன் சொன்னதை கிரகித்துக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டவர், அவன் கூறியதை மூளை ஏற்ற
நேரம் "என்ன டா இதெல்லாம்?"
என்று அவன் மீது சீறி விட்டார்.
ஜார்ஜ் மற்றும் பிரகாஷ் தான் அவரை தடுத்து பிடித்தனர். அப்போதும் கூட
தன் விரலோடு விரல் கோர்த்து நின்றவன் விரல்களை அழுத்தி பிடித்தானே தவிர, அவன் கையை விடும் எண்ணம்
வரவில்லை ரியானுக்கு.
ஜார்ஜும் அவன் குடும்பமும் லண்டன் சுற்றுலா வந்து இருந்தனர்.
வந்தவர்கள் ரியான் வீட்டில் தங்கிக் கொள்ள, ரியானும் ஜார்ஜ் இருக்கும் தைரியத்தில் இன்று தன் தந்தையிடம் தன்னை
பற்றி கூற தயாரானவன், தன்
இணையையும் அறிமுகம் செய்து வைக்கவே துணிந்து அழைத்து வந்திருந்தான்.
24 வயது மகன் காதலில் விழுந்தான் என்பதை ஏற்றுக் கொள்ள முடிந்த அவரால்
அவன் காதலித்த நபரை தான் ஏற்றுக் கொள்ள முடியாமல் அல்லோல பட்டார்.
ஜார்ஜ், தாமினி, ரியான் அம்மா தவிர்த்து
அங்கு இருந்த அனைவருக்கும் இது அதிர்ச்சி தகவல் தான். ஏதும் கருத்து கூறும்
நிலையில் யாரும் இல்லை.
ரியான் தந்தையோ,
"எனக்கு புரியல, இவன்
என்ன சொல்றான், ஒரு
பையனோட வாழ போறேன் சொல்றானா?
" என்று அவர்கள் உறவை ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறி போனவர், இன்னமும் கூட அவன் கையை
விடாது பிடித்துக் கொண்டு நின்ற தன் மகன் மீது கொலைவெறியே கொண்டார்.
ரியானும் "தன் முடிவில் மாற்றம் இல்லை. நீங்கள் மாறி தான் ஆக
வேண்டும், ஏற்றுக்
கொண்டாலும் இல்லை என்றாலும் எங்கள் வாழ்வை தொடங்க தான் போகிறோம்" என்று
தீர்க்கமான பார்வை பார்த்து நின்றான்.
மீண்டும் கண் முன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் மகனை பார்த்து அவர்
இரத்த அழுத்தம் அதிகரிக்க, ஜார்ஜ்
தான் "அங்கில் என்னோட வாங்க" என்று அவரை தனி அறைக்கு அழைத்து சென்றவன், தன் கருத்திற்கு தன்
தாத்தாவும் தந்தையும் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையில் "நீங்களும்
வாங்க" என்று இருவரையும் துணைக்கு அழைத்து சென்றான்.
அவர்கள் உள்ளே சென்றதும் வெளியே எஞ்சி இருந்த மற்றவர்கள் புறம் தன்
பார்வையை செலுத்தினான் ரியான்.
அமலாவும் சோபியாவும் இன்னும் விழி விரித்து அதே அதிர்ச்சி நிலையில்
உறைந்து இருக்க, ரியான்
அம்மாவோ "இன்னும் இந்த பையன் என்னலாம் பண்ண போறானோ?" என்று
தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார்.
தாமினி தான் "இது லோகன் தானே, இந்த அரை டிக்கெட் நம்மகிட்ட சொன்ன கதை என்ன? இப்போ நடக்கிறது என்ன?" என்ற ஏக
குழப்பத்தில் அவன் அருகில் வந்தவள், "என்ன டா நடக்குது இங்க? இது எப்போ செட் ஆச்சு? என் கிட்ட சொல்லவே
இல்லை" என்று வியப்பாக கேட்க,
அவனோ 'அப்பா
ஏற்று கொள்வாரா? இல்லையா?' என்ற பதட்டம் இருந்தாலும், அவளுக்கு
பதில் அளித்தான். "சொல்றேன் டாம்" என்றவன் அவளை சோபாவில் அமர வைத்து
லோகனுடன் அவனும் அமர்ந்து கொண்டான்.
டான்ஸ் ஸ்கூல் முடிஞ்சு எல்லாரும் பிரிஞ்சு போன அப்புறம் யாரும்
அதிகமா மீட் பண்ணிக்கல, வழக்கம் போல
வாழ்க்கை போய்ட்டு இருந்தது. படிப்பு முடிந்து அப்பா கூட பிசினஸ்ல ஜாயின் பண்ணேன்.
அப்போ தான் ஒரு நாள் நைட் ரோட்டுல வீனஸ் பார்த்தேன், வேற ஒரு பையனோட. அவளை கிஸ்
பண்ணிட்டு பை சொல்லிட்டு போனான்.
அவன் நகர்ந்து போனதும் அவங்க எதிரில நின்னுட்டு இருந்த என்னை பார்த்ததும்
ஷாக் ஆகிட்ட, அவளோட
பார்வைல ஒரு தடுமாற்றம் இருந்துச்சு,
"லோகனும் வீனஸ்சும் லவ் பண்றதா ரியா சொன்ன? ஒரு வேளை பிரேக் அப்
ஆகிடுச்சா?" இதுதான்
அப்போ என் மைண்ட்ல ஓடிட்டு இருந்தது.
வீனஸ் என் பக்கத்துல வந்து "ஹாய்" சொன்ன, நான் என்னோட சந்தேகத்தை அவ
கிட்ட கேட்டேன்.
"ஹூ இஸ் திஸ்"
பதில் சொல்லாம கொஞ்சம் யோசிச்சா, அப்புறம் கண்ணை அழுந்த மூடி ஆழ்ந்த மூச்சு ஒன்னு விட்டு சொன்னா,
"ஹி இஸ் மை கஸ்டமர்"
நான் புரியாம அவளை பார்த்தேன்.
"எஸ் ஐ அம் எ கால் கேர்ள் "
அவ சாதாரணமா சொல்லிட்டா, ஆனா என்னால தான் அக்செப்ட் பண்ணிக்க முடியல. இந்த மாதிரி ஒரு பதில்
சொல்லுவானு நான் எதிர் பார்க்கலை. அதிர்ச்சியாகி அவளை பார்த்துட்டு இருந்தேன்.
அவளே தொடர்ந்தாள்.
"பிடிச்சவங்க கிட்ட ரொம்ப நாள் உண்மையை மறைச்சு நடிக்க முடியாது.
எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் ரியான். யூ லைக் மை லிட்டில் பிரதர்"
எனக்கும் அவளை பிடிக்கும், நண்பி தாண்டிய ஒரு அக்கறை அவகிட்ட எப்பவும் இருக்கும், அவ எதுக்கு இந்த தொழில்
பண்றானு கேட்டேன்.
அவளோட 16 வயசுல, லிவர் பெளியர் அம்மாக்கு
டீரீட்மெண்ட் பண்றதுக்காக ஷி செலக்ட் திஸ் வொர்க். குறுகிய காலத்துல அதிக பணம் சம்பாதிக்க
அவ தேர்ந்தெடுத்த வழி.
ஆனா அவளால அப்போ அவ அம்மாவை காப்பாத்த முடியல, இந்த மாதிரி
டீரீட்மெண்ட்க்கு காசு இல்லாம கஷ்ட படுறவங்களுக்கு உதவி பண்றதுகாக ஷி காண்டினியூ
திஸ் வொர்க்னு சொன்னா.
"இதெல்லாம் வேண்டாம் எல்லாத்தையும் விட்டுரு, ஐ ஹெல்ப் யூ. ஒரு நல்ல ஜாப்
தேடி கொடுக்கிறேன்." சொன்னேன்.
"நானும் அந்த ஐடியால தான் இருக்கேன். எனக்கும் இது வேணாம். கொஞ்சம்
காசு சேர்த்து வச்சு இருக்கேன். டான்ஸ் ஸ்கூல் ஸ்டார்ட் பண்ண போறேன். டுடே இஸ் மை
லாஸ்ட் டேனு " மனசில இருந்த பாரம் நீங்கி உற்சாக குரல்ல சொன்னா.
கொஞ்ச தூரம் பேசிட்டே நடந்தோம். என் எண்ணம் மொத்தமும் 'லோகனுக்கு வீனஸ் பத்தி
தெரியுமா? அவன் இதை
எப்படி ஏத்துகிட்டானு' தான்
தெரிஞ்சிக்க ஆர்வமா இருந்துச்சு. ஆனா அதுக்கு முன்னாடி இப்பவும் ரெண்டு பேரும் லவ்
பண்றாங்கலானு தெரிஞ்சுக்கனும்.
"ஸ்டில் யூ அண்ட் லோகன் லவ் டூ ஈச் அதெர்?" நான்
தயக்கதோட கேட்டேன்.
சத்தமா சிரிச்சா,
நான் என்ன அவ்வளவு பெரிய ஜோக் ஆஹ் சொன்னேன்.
"நாங்க எப்போ லவ் பண்ணோம் இப்பவும் லவ் பண்றியானு கேட்கிற" அவ
பதில்ல இப்போ ஷாக் ஆனது நான் தான்.
'இவ என்ன சொல்ற, ரெண்டு
பேரும் லவ் பண்றதா ரியா சொன்னாலே,
இன்பேக்ட் டேட்டிங் போறத பார்த்ததா வேற சொன்னா?'
"நிஜமா நீங்க லவ் பண்ணலையா?"
அவ சிரிப்பு அடங்குச்சு சின்ன வலி மனசுல, "எனக்கு
லோகன் பிடிக்கும். நான் லவ் பண்ணேன் தான். ஆனா அவனுக்கு என்மேல இன்டர்ஸ்டு இல்ல
சொல்லிட்டான். ஜஸ்ட் ஒன்லி ப்ரெண்ட்னு சொல்லிட்டான்." அவ கண்ணுல வலியோட
சொன்னா, விரக்தியா
சிரிச்சா..
"உனக்கு ஆக்ஸிடென்ட் நடந்த அன்னைக்கு தான். அவன் அக்செப்ட்
பண்ணிப்பானு கிஸ் பண்ணி லவ் சொன்னேன். உடனே நோ சொல்லி விலகி போய்ட்டான்."
அவ கண்ணு லைட்டா கலங்கி போச்சு, மூச்ச உள்ள இழுத்து கண்ட்ரோல் பண்ணிக்கிட்டா. லவ் ஃபெயிலியர் வலி
எனக்கும் தெரியுமே! என்னால புரிஞ்சுக்க முடியுது அவளோட வலியை. ஆனா இதுல என்ன ஒரு
பியூட்டினா? ரெண்டு
பேர் வலிக்கும் காரணம் ஒரே பையன் தான்.
"உனக்கு இன்னொரு சீக்ரெட் சொல்லாவானு கண் சிமிட்டி கேட்டா?"
அவ இவ்வளவு நேரம் சொன்னதே என்னால ஜீரணிச்சுக்க முடியல, இதுல இன்னொரு சீக்ரெட் ஆஹ்? என்னனு அவளை பார்த்தேன்.
"லோகன் அல்சோ மை கஸ்டமர்.. "
ஏதே... அவ்வளவு தான் என் குட்டி ஹார்ட் அட்டோபோம் வச்சு வெடிக்க
வச்சுட்டா...
போதும் இதுக்கு மேல நான் எதுவும் கேட்க விரும்பல, அவ கிட்ட பை சொல்லிட்டு
கிளம்பிட்டேன்.
ஒரே நாள்ல எத்தனை ஷாக், லோகன் வீனஸ்சோட கஸ்டமர் ஆஹ்? அப்போ அவன் நார்மல் பாய் தான். அவ்வளவு தான் அவங்க ரெண்டு பேருக்கும்
எதுவும் இல்லனு சொன்னத கேட்டு சந்தோச பட்ட இதயம் கண்ணீர் வடிக்க ஆரம்பிச்சது.
எனக்கு இந்த காதல் கல்யாணம் எதுவும் வேண்டானு முடிவு பண்ணி முழு
மூச்சா அப்பா பிசினஸ்ல கான்சன்டிரேட் பண்ண ஆரம்பிச்சேன்.
மறுபடியும் விதி விளையாட ஆரம்பிச்சது என் வாழக்கையில, வீனஸ் உருவத்துல.
அவளோட டான்ஸ் ஸ்கூல் ஓபனிங்க்கு எங்களை இன்விட் பண்ணி இருந்தா.
அன்னைக்கு மறுபடியும் லோகனை பார்த்தேன். ரொம்பவே சேன்ஜ் ஆகிட்டான்.
ஃபக்கி ஆஹ் ஹேர் கலரிங் பண்ணிட்டு இருந்தவன், இப்போ மேன்லி ஆஹ் ரொம்பவே ஹேன்ட்சம் ஆகிட்டான்.
என்னை பார்த்ததும் எப்பவும் போல நார்மலா என்கிட்ட பேசினான்.
"பேபி பாய் லூக்ல இருந்து ஹேன்ட்சம் பாய் ஆஹ் ஆகிட்டேனு" சொன்னான்.
எனக்கு சிரிப்பு தான் வந்தது. நான் சைட் அடிக்கிற பையன் என்னை
அப்ரீஷியட் பண்றான்.
ரியா கூட வந்து இருந்தா, "இப்பாவது என்னை லவ் பண்ணுவியானு" கேட்டா, எனக்கு அவளை பார்க்கவும்
பாவமா தான் இருக்கு. ஆனா அவ ஏன் என்னை புரிஞ்சிக்கலனு கொஞ்சம் கோபமும் வந்துச்சு.
"உனக்கு பாய் தான் பிடிக்கும்னா, நான் வேணா பையனா மாறவா?"னு பாவமா முகத்தை வச்சு கேட்டா, "ரியா
என்னை இந்த அளவுக்கு லவ் பண்றாளா?
விரும்புற பையனுக்காக கேரக்டர் சேன்ஜ் பண்ணவே யோசிக்கிறவங்க நடுவுல தன்னோட
ஜென்டர் சேன்ஜ் பண்ண கூட தயாரா இருக்கா. என்ன மாதிரியான பொண்ணு இவ! நான் அன்லக்கி
இந்த பொண்ணா வேணா சொல்றேன்.
இப்போ இவள பார்த்த கோபம் இல்ல வியப்பா இருக்கு. ஆனா நிதர்சனத்தை
ஏத்துக்கணும் இல்லையா? எப்பவும்
போல அவளுக்கு புரிய வைக்க டிரை பண்ணேன்.
"அப்படியெல்லாம் மாற முடியாது. இன்னர் ஹார்மோன்ஸ் சேஞ்சஸ்க்கு எந்த
டீரீட்மெண்டும் கிடையாது.
ரியா, நாம
கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னால என்னோட சந்தோசமா இருக்க முடியாது. வீ ஹவ் டூ செக்ஸ்
பட் அதுல எந்த பிலிங்ஸ்சும் இருக்காது. இயந்திர தனமான வாழ்க்கை தான் வாழனும்.
பிளீஸ் புரிஞ்சுக்க"
அவ புரிஞ்சுக்கிட்டாளா தெரியல, ஆனா அழுதா.
"என்னை விட நல்ல பையனா, உன்னை புரிஞ்சுகிட்டவன் நிச்சயம் கிடைப்பான். உன்ன கண்ணுல வச்சு
பார்த்துப்பான். அவனோட நீ சந்தோசமா இருப்ப" அவள சமாதானம் பண்றதுக்காக மட்டும்
இதை சொல்லல, ரியா
ரொம்ப நல்ல பொண்ணு, என்னை
நினச்சு அவ வாழ்க்கையை அவ கெடுத்துக்க கூடாது.
கொஞ்சம் அழுதா, அப்புறம்
கண்ணீரை துடைச்சுட்டு என்னை ஹக் பண்ணிட்டு சொன்னா "ஐ லவ் யூ ரியான்."
இந்த பொண்ணா நான் என்ன தான் பண்றது. எனக்கும் வலிக்குது அவளோட
கண்ணீர் பார்க்கும் போது.
"உன்னை லவ் பண்ண மாதிரி வேற யாரையும் லவ் பண்ண முடியுமானு தெரில, ஆனா கல்யாணம் பண்ணிப்பேன், அப்பா சொல்ற பையனை..
அப்புறம் வேணா அவனை லவ் பண்ண டிரை பண்றேன். அதுவரைக்கும் நோ லவ் நோ பெயின் நோ
க்ரை.. நீ ஃபீல் பண்ணாதா. நான் ஓகே ஆகிடுவேன்" சொல்லிட்டு போய்ட்டா.
லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் ரொம்ப கில்டியா இருக்கு. நோ' ங்கிற வார்த்தை
கேட்கிறவங்களுக்கு மட்டும் இல்ல சொல்றவங்களுக்கும் வலியை கொடுக்கும்.
அங்க இருந்து கிளம்பும் போது லோகன் வந்தான். லிஃப்ட் கேட்டான். 'இன்னும் இவங்கிட்ட கார்
இல்லையா? நம்ப
முடியல!' ஆனா நான்
எதுவும் கேட்டுக்கல, மனசுக்கு
பிடிச்சவங்க கூட கொஞ்சம் நேரம் ஸ்பெண்ட் பண்ண கிடைக்கும் போது அதை ஏன் வேணாம்
சொல்லணும்.
அங்கிருந்து கிளம்பும் போது கடைசியா ஒருமுறை ரியாவ திரும்பி
பார்த்தேன். வீனஸ் தோள்ல சாஞ்சி அழுத்துட்டு நின்னா. நான் பார்க்கிறேனு
தெரிஞ்சதும் என்னை பார்த்து ஸ்மைல் பண்ணா. நானும் லைட் ஸ்மைல்லோட ரெண்டு
பேருக்கும் பை சொல்லிட்டு கிளம்பினேன்.
லோகன் கார் ஓட்டுறதா சொன்னான். "எனக்கு 18 வயசு முடிஞ்சது, நௌ ஐ அம் 22" சொன்னேன்.
இன்னும் அவன் என்னை சின்ன பையனு நினச்சிட கூடாதே. அவன் சிரிச்சிட்டே என் தலையை
களைச்சு விட்டு என் கிட்ட இருந்து கீ வாங்கி கார் ஸ்டார்ட் பண்ணான்.
நான் மட்டும் ஏன் காருக்கு வெளிய நிக்கணும்.. நானும் ஏறினேன் ப்ரண்ட்
சைட் அவன் பக்கத்துல, நார்மல்
ஸ்பீட்ல ஓட்டுனான். ரொம்ப அமைதியா இருக்கான். நானே பேச்ச ஸ்டார்ட் பண்ணேன்
"என்ன பண்றீங்க.. எனி பிசினஸ்.. "
"ஓன் காஃபி ஷாப் ஓபன் பண்ணி ரொம்ப நல்லா போகுது. நீ என்ன பண்ற"
"அப்பா கூட ஜாயின் பண்ணிட்டேன்."
"ஹ்ம்ம்... நல்ல முடிவு தான்.. அப்புறம் லைஃப் பத்தி என்ன யோசிச்சு
இருக்க?"
"என்ன?"
"இல்ல லவ், மேரேஜ்
இத பத்தி... ரியா கூட ரொம்ப நல்ல பொண்ணு தான். அவளை கூட கொஞ்சம் கன்சிடர்
பண்ணலாம்."
இதுக்கு நான் என்ன பதில் சொல்றது. "அதை பத்தி இப்போ எதுவும்
யோசிக்கல அப்புறம் பாத்துக்கலாம்" சொன்னேன்.
"ஓகே ரியா பத்தி யோசிக்கல., லோகன் பத்தி.."
"வாட்...."
நான் சத்தமா கத்திட்டேன், மேபீ அவன் பயந்துட்டான் போல சடன் பிரேக் போட்டு காரை நிறுத்திட்டு
என்ன பார்த்தான்.
கொஞ்சம் பதட்டமா இருக்கான் ஆனா தைரியமா என் கண்ணை பார்த்து சொன்னான்.
"ஐ லவ் யூ ரியான்"
'மை காட்... லோகன் என்னை லவ் பண்றானா?' உள்ளுக்குள்ள மனசு கூத்தாட்டம் போடுது. ஆனா வெளிய
மூஞ்சோ பேயறைஞ்ச மாதிரி இருக்கு. லைஃப் அப்டியே ஸ்ட்ரக் ஆனா மாதிரி இருக்கு. ஆனா
நல்லா இருக்கு.
"எனக்கு உன்னை பிடிக்கும் ரியான் இன் அவர் ஃபர்ஸ்ட் மீட்டிங்ல
இருந்து. ஆனா பெரிசா எதுவும் யோசிக்கல,
நீயும் வீனஸ்சும் ஃபர்ஸ்ட் டைம் கப்பிள் டான்ஸ் பண்ண போது தான்
எனக்கு புரிந்தது. ஐ அம் லிட்டில் க்ரஷ் வித் யூ. நீயும் வீனஸ்ஷூம் டச் பண்ணி
டான்ஸ் பண்ணும் போது என்னை அறியாமலே கோபப்பட்டேன். அவ எப்படி உன்ன டச் பண்ணலானு.
ரியா, வீனஸ்
ஆஹ் லவ் பண்றீங்களானு கேட்ட அப்புறம் தான் நான் என்ன பண்றேனு சுய உணர்வு
வந்துச்சு.
அப்போதைக்கு அதை மறைச்சு அவளோட டான்ஸ் பண்ணேன். ஆனா அதுக்கப்புறம்
தான் என்னை நானே ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன். ஆஸ் எ ரிசல்ட் ஐ அம் நாட் எ நார்மல்
பாய்.
ஐ என்ஜாய்ட் யுவர் கம்பனி. உன்ன பார்க்க பிடிக்கும், உன்னோட பேசி பிடிக்கும், உன்னோட டான்ஸ் பண்ண
பிடிக்கும்., அடிக்கடி
உனக்கு தெரியாம உன்ன சைட் அடிக்க ரொம்ப பிடிக்கும்.
நியூ இயர் அன்னைக்கு, என்னையும் மீறி உன்ன ரசிச்சு கமெண்ட் பண்ணி உன்கிட்ட மாட்டிக்க
பார்த்தேன். நீ சட்டுனு திரும்பி யாரா சொல்றனு கேட்டப் போது என்ன சொல்லி சமாளிக்க
தெரியாமல் முழிச்சிட்டு இருந்தா,
நீயே வீனஸ் பக்கம் பார்த்து ஏதோ முடிவு பண்ணிக்கிட்ட, நானும் எதையும் காட்டிக்காம
அதையே மெயின்டெய்ன் பண்ணி உன்ன விட்டு எஸ்கேப் ஆகிட்டேன்.
நானே எதிர்பார்க்காத நிகழ்வு தான் நீ என்னோட பஸ்ல வந்தது. ஐ ரியலி
என்ஜாய்ட் தட் மோமெண்ட். போதையில எதுவும் உளறி வச்சிற கூடாதுனு உன் தோள்ல சாஞ்சி
தூங்குற மாதிரி நடிச்சா, நீ
அதையும் நம்பி நான் சாஞ்சிக்க வாகா தோள் தந்துட்டு பாட்டு கேட்க ஆரம்பிச்சுட்ட,
அன்னைக்கு உன்ன பக்கத்துல வச்சுட்டு எதுவும் சொல்லாம, தப்பா எதுவும் நடந்துக்காம
கண்ட்ரோல் ஆஹ் இருக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.
அதுக்கப்புறம் நீயும் என்னோட காஃபி ஷாப்ல வேலைக்கு சேர்ந்த. ஏதோ
லாட்டரி அடிச்ச மாதிரி இருந்தது. உன்னோட நிறய நேரம் கழிக்க முடிஞ்சது.
எல்லாம் நல்லா போய்ட்டு இருந்தது. நீ ஒன் மந்த் லீவ்க்கு இந்தியா போன
போது தான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன். உன் மேல வச்சு இருந்த காதல் தெளிவா
புரிஞ்சுது.
கூடவே இந்த ரீலேஷன்ஷிப்னால ஏற்படுற பாதிப்பும் புரிஞ்சுது. நீ ரொம்ப
சின்ன பையன். உன்னால இதை ஹாண்டில் பண்ண முடியுமானு சந்தேகம் வந்துச்சு. எல்லாம்
தாண்டி நீ நார்மல் பாய் ஆஹ் இருந்தா? உன்ன ஹர்ட் பண்ணிட கூடாதுங்கிறதுல ரொம்ப கவனமா இருந்தேன்.
உன்ன விட்டு விலகி போக ஆரம்பிச்சேன். நார்மல் ஆஹ் இருக்க முயற்சி
பண்ண ஆரம்பிச்சேன்.
ஐ வான்ட் டூ செக் மை செல்ஃப். சோ கால் டூ கால் கேர்ள்ஸ் . ப்ரெண்ட்
நம்பர் கொடுத்தான்.
ஆனா ஷாக்கிங் நியூஸ் வந்தது வீனஸ். தட் வாஸ் எ ஆக்குவேர்டு ஃபீல்.
என்னால அவ கிட்ட எப்படி அப்படி நடந்துக்க முடியும்.
அன்னைக்கு நைட் ரெண்டு பேரும் நிறைய பேசினோம். அவ கஷ்டங்களை சொன்னா, எனக்கு என்னை பத்தி சொல்ல
தைரியம் இல்ல, "உனக்கு
ஒரு நாள் ரெஸ்ட் கொடுக்க தான் கால் பண்ணி வர சொன்னேன்" பொய் சொல்லி அவளை
தூங்க சொன்னேன்.
அதுக்கப்புறம் எப்போவாது மனசு கஷ்டமா இருந்தா, ரெஸ்ட் தேவைபட்டா? வெளிய போகலாமானு கேட்பா, நானும் போய் இருக்கேன்.
"இதை தான் ரியா எட்ட நின்னு பார்த்துட்டு வந்து லவ் பண்றாங்க டேடிங்
போறாங்கனு சொல்லி இருக்கா.." ரியான் மைண்ட் வாய்ஸ்.
ஆனா அவ என்னை லவ் பண்ணுவானு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கல, அவ கிஸ் பண்ணும் போது ரியலி
ஐ அம் ஷாக்ட். என்னால அவளை ஹர்ட் பண்ண முடியல, ஆனா அவளை தனியா அழச்சு வந்து உண்மையை சொன்னேன்.
அந்த நேரம் தான் உனக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடிச்சுனு ரியா வந்து சொன்னா...
ஒரு நிமிஷம் இதயமே நின்னு போச்சு. ஹாஸ்பிடல்ல நீ கண் திறக்கிற
வரைக்கும் அவுட் ஆப் மைண்ட்ல தான் அங்க இருந்தேன்.
காட் கிரேஸ் நீ நல்ல படியா உயிர் பிழைச்சுட்ட. எங்க உன்ன பார்த்தா, பேசினா, என்னோட ஃபீலிங் சொல்லி உன்ன
ஹர்ட் பண்ணிடுவேன் தான் மொத்தமா உன்ன விட்டு விலகி போனேன். ஆனா உன்ன மறந்து போகல, உனக்கு தெரியாம தினமும்
உன்ன ஃபாலோ பண்ணி தூரத்துல இருந்து ரசிச்சுட்டு அப்படியே கிளம்பி
போய்ருவேன்."
லோகன் சொல்லி முடிச்சிட்டு நான் எதுவும் சொல்லுவேன்னு என் கண்ணை
பார்த்துட்டு இருந்தான்.
எனக்கு தான் நாக்கு ஒட்டிகிச்சே, சந்தோசத்துல வார்த்தையே வரல, நான் நினைச்ச மாதிரி நினைச்சு தான் அவனும் இவ்வளவு நாள் பிரிஞ்சி
இருந்து இருக்கான்.
இதை நினைக்கும் போதே கண்ணுல தண்ணீ வந்துருச்சு. ஆனா அதை பார்த்து
அவன் பாயந்துட்டான்.
"பிடிக்கலைனா பிடிக்கலை சொல்லிடு. அதுக்கு ஏன்டா அழுகுற, நான் வேணா இப்பவே கார
விட்டு இறங்கி போய்டுறேன்" சொல்லிட்டு இறங்குறதுக்கு கார் கதவ ஓபன் பண்ணவன்
ஷர்ட் காலரை பிடிச்சு இழுத்து அவனை ஹக் பண்ணேன்.
மறுபடியும் அவனை இழக்க விரும்பல, சில நொடி அணைப்பு.. அப்புறம் நானும் சொன்னேன் அவன் மேல எனக்கு இருந்த
காதல் பத்தி.
ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினதுல இன்னொரு விசயம் புரிஞ்சுது, இப்போ வீனஸ் டான்ஸ் ஸ்கூல்
ஓபன் ஃபங்ஷன் எங்களை சேர்த்து வைக்க வீனஸ் ரியா ஏற்பாடு பண்ணினது.
ஹவ் டூ ஷி க்நோ னு எனக்கு தெரில, விரும்புறவங்க மனசுல யார் இருக்காங்கனு தெரிஞ்சிக்க அவங்க காட்டுன ஆர்வம்
தான் இன்னைக்கு எங்களை சேர்த்து வச்சு இருக்கு.
தாங்க்ஸ் டூ வீனஸ் அண்ட் ரியா.
இப்போ ரிசன்ட் ஆஹ் ப்ரோ தான். இன்னும் எத்தனை நாள் மறைச்சு வாழ
போறீங்க? ஒரு முறை
தைரியமா எல்லார்கிட்டயும் சொல்லிட்டா, ஏத்துகிறாங்களோ இல்லையோ, தப்பு பண்றோமோ என்கிற கில்டி ஃபீல் இல்லாம நிம்மதியா இருக்கலாம்னு
சொன்னார்.
அவரோட பிளான் தான் இன்னைக்கு லோகன வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தது.
அவர் சொன்ன மாதிரி இப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கு.
மனம் நெகிழ்ந்து பாதி கதை ரியானும், லோகன் பார்ட் லோகனும் கூறி முடிக்க, தாமினி மட்டுமல்ல தாய்மார்களும்
கேட்டுக் கொண்டனர்.
அவர்கள் வயதிற்கு ரியான் லோகன் உறவை ஏற்றுக் கொள்ள தடுமாற்றம்
இருந்தாலும், ரியான்
சந்தோசம் அந்த பையனுடன் தான் என்றால் குறுக்கிட ஏனோ மனம் இசையவில்லை.
உள்ளே ஜார்ஜும் ரியான் தந்தையிடம் பேசியே அவரை சம்மதிக்க வைத்தான்.
அவரும் இரு மனதாக தன் மகன் விருப்பத்திற்கு சம்மதம் சொன்னார்.
ரியான், லோகன்
உறவை எவராலும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் பிரிக்க மனம்
வரவில்லை.
(இந்த உலகம் எல்லாரும் அவரவர் உணர்வுகளோடும் விருப்பத்தோடும் வாழ
தானே. யாரையும் வெறுத்து ஒதுக்க வேண்டாம். ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை
என்றாலும் நிராகரிக்க வேண்டாமே. அவங்க தனி உலகில் அவங்க சந்தோசமா வாழ்ந்துட்டு
போகட்டும். இப்படி தான் இருக்கணும், இப்படி இருக்க கூடாது என்று நம் விருப்பு வெறுப்ப அவங்க மேல திணிக்க
வேண்டாமே !)
"இங்க ஓரளவுக்கு ஓகே. லோகன் வீட்ல ஓகே சொல்லுவாங்களா?" தாமினி
தான் ரகசியமாக ரியான் காதை கடித்தாள்.
அவனோ "லோகன் வீட்ல ஒரு வாரம் முன்னமே பேசிட்டோம்."
"என்ன சொன்னாங்க?"
"லோகனை வீட்ட விட்டு துரத்திடாங்க, அதான் இப்போ இந்த உடனடி லிவிங் டுகெதர்." என்று அவன் கூலாக
சொல்ல,
"எல்லாம் ஓகே தான். லைஃப் லாங் ரெண்டு பேரும் மட்டும் போதுமா. இந்த
குழந்தை எல்லாம் வேண்டாமா?"
"அதுவும் பிளான் பண்ணிட்டோம் டூ இயர்ஸ் லைஃப் என்ஜாய் பண்ணிட்டு, அப்புறம் ஜார்ஜ் ப்ரோ
கொடுத்த மாதிரி குழந்தை பெத்துக் கொடுக்க பொண்ணு வேணும்னு ஒரு அட்வடைஸ்மெண்ட்
போட்டு சரோகன்ட் மதர் வச்சு குழந்தை பெத்துக்க வேண்டியது தான்." என்று லோகன்
சர்வ சாதாரணமாக சொல்ல,
'அட பாவிகளா' என்று
வாயில் கை வைத்து நின்றது என்னவோ தாமினி தான்.
இந்த ஜார்ஜ் ஆரம்பிச்சி வச்ச வேலை, இவங்க கண்டினியு பண்ண பார்க்கிறாங்க.. இவங்க கிட்ட
எந்த பொண்ணு வந்து மாட்ட போகுதோ!!!!
அவளால் மனதில் புலம்ப மட்டும் தான் முடிந்தது.
Comments
Post a Comment